செவ்வாய் 26, செப்டம்பர் 2017  
img
img

முன்னணி இயக்குனரின் பாலியல் தொல்லை! அட்ஜெஸ்ட்மென்ட்!
வியாழன் 09 மார்ச் 2017 16:01:49

img

திரையுலகில் பாலியல் தொல்லைகளை சந்தித்துள்ளதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மனம் திறந்து பேசியுள்ளார். திரையுலகில் பாலியல் தொல் லைகளை சந்தித்து வருவது குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக முன்வந்து பேசிவருகிறார்கள்.கேரளாவில் நடிகை ஒருவர் மானபங்கப்படுத்தப் பட்டதையடுத்து நடிகைகள் துணிந்து பேசத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல ஆங் கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, நான் சினிமாவுக்கு வந்த நாளில் இருந்து கிட்டத்தட்ட தினமும் பாலியல் பாகுபாட்டால் கேலிக்கும், கிண்டலுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகியுள் ளேன். சினிமா துறையில் ஆண்களுக்கு ஒரு சம்பளம், பெண்களுக்கு ஒரு சம்பளம். பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு மரியாதை இல்லை. ஹீரோ வுக்கு ரூ.40 கோடி சம்பளம் தருவார்கள். ஆனால் அதில் 10 சதவீதம் கூட ஹீரோயினுக்கு கொடுக்க மாட்டார்கள். ஒரு ஹீரோவால் மட்டுமே படம் ஓடுகிறது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். முன்னணி மலையாள இயக்குனரான அவர் தமிழிலும் படம் எடுத் துள்ளார். அவர் எனக்கு பாலியல் தொல்லைகள் தர முயன்றார். அதை நான் எதிர்த்தபோது படப்பிடிப்பு தளத்தில் வைத்து என்னை அசிங்கப்படுத்தினார். படப்பிடிப்பு தளத்தில் தேவையில்லாமல் என்னை திட்டினார். நான் நன்றாக நடித்தாலும் சில காட்சிகளை 25 டேக் எடுக்க வைத்தார். அவர் என்னிடம் மன் னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறியதால் நான் தான் அவதிப்பட்டேன். அவரை போன்றவர்களை பற்றி நாம் பேசுவது இல்லை. அண்மையில் ஒரு இயக்குனர் அனுப்பி வைத்ததாக கூறி அவரின் உதவியாளர் வந்து என்னிடம் கதை சொன்னார். கதை சொல்லும்போதே அட் ஜெஸ்ட் மென்ட் பற்றி பேசினார். அவர் எந்த அட்ஜெஸ்ட்மென்ட்டை பற்றி பேசுகிறார் என்று தெரிய வந்து அதிர்ந்துபோய் அவரை வெளியே செல்லு மாறு கூறினேன். புத்திசாலி பெண்ணுடன் பணியாற்ற யாரும் விரும்புவது இல்லை. நியாயமான சம்பளம், சம உரிமை கேட்கும் பெண்ணாக இரு்தால் அவரை கடவுள் தான காப்பாற்றணும் என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img