வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

பிரபல நடிகரும், இசையமைப்பாளரும் என்னை பலாத்காரம் செய்துவிட்டனர்.. பாடகி திடுக் டிவிட்
சனி 04 மார்ச் 2017 12:29:58

img

திரைப்பட பாடகி சுசித்ராவின் டிவிட்டர் அக்கவுண்டிலிருந்து பிரபல நடிகர், இசையமைப்பாளர், நடிகைகளின் ஆபாச கோல காட்சிகள் வெளியாகிபடியே உள்ளன. சக பாடகியான சின்மயி போன்றோர், சுசித்ரா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிவரும் நிலையில், தொலைக்காட்சி சேனல்கள் சில வற்றுக்கு அளித்த பேட்டியில், தனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா தெரிவித்தார். அதேநேரம், ஹேக் செய்யப்பட்ட அக் கவுண்டை ஏன் இதுவரை முடக்கவில்லை என்ற கேள்வி தொடர்ந்து நெட்டிசன்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. தேதி, நாள் குறித்து, தினமும் ஒரு பிரபலத்தின் அந்தரங்க வீடியோவை வெளியிட உள்ளதாகவும் டிவிட்டர் அக்கவுண்டில் குறிப்பிட்டுள்ளார் சுசித்ரா. நேற்று இரவு, இன்று அதிகாலை என அவ்வப்போது சுசித்ரா வெளியிட்டுவரும் டிவிட்டர் தகவல்கள் நெட்டிசன்கள் தூக்கத்தை கெடுத்துள்ளது. அடுத்து எந்த பிரபலத்தின் போட்டோ அல்லது வீடியோ வருமோ என்ற எதிர்பார்ப்பில் நெட்டிசன்கள் உள்ளனர். இந்நிலையில், சுசித்ராவின் டிவிட்டர் அக்கவுண்ட் பூட்டு போடப்பட்டது. அதாவது ஏற்கனவே அவரை ஃபாலோ செய்வோர் மட்டுமே அவரது டிவிட் டுகளை பார்க்க முடியும். ஆனால் இன்று காலையில் அதை ரிலாக்ஸ் செய்தார். பிறகு மீண்டும் லாக் செய்யப்பட்டது. இந்த இடைவெளியில் சுசித்ரா வெளியிட்ட டிவிட்டுகள் சில நேரடியாக ஒரு பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் மீது பாலியல் புகார் கூறுவதாக இருந்தது. இதுவரை அவர் வெளி யிட்ட டிவிட்டுகள் இரு தரப்பு சம்மதத்துடன் நடந்த பாலியல் நடவடிக்கை என கூறப்பட்டிருந்த நிலையில், இந்த ஒரு டிவிட் பலாத்காரம் என நேரடியாக குற்றம்சாட்டியது. ஒரு பிரபல நடிகர் மற்றும் இசை அமைப்பாளருடன் பார்ட்டியில் பங்கேற்றதாகவும், அப்போது தான் அருந்திய பானத்தில் மருந்து கலக்கப்பட்டு தரப் பட் டதாகவும், பிறகு நடந்த அந்த பயங்கர அனுபவத்தை இங்கு கூற முடியாது என்று சுசித்ரா டிவிட்டர் அக்கவுண்டிலிருந்து வெளியான டிவிட்டுகள் சொல் கிறது. அந்த இருவரும் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் டிவிட்டில் கூறப்பட்டுள்ளது. பலாத்காரம் பெரும் குற்றம் எனும் நிலையில் இந்த டிவிட்டுகள் மீது போலீஸ் விசாரணை நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சுசித்ரா ஒரு ஒல்லி நடிகர் மற்றும் ஒல்லி இசையமைப்பாளர் மீது தான் இக்குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img