ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

தமிழ் அழிவதை தாங்க முடியாத உள்ளங்களின் அரிய முயற்சிகள்!
ஞாயிறு 26 பிப்ரவரி 2017 13:18:04

img

தமிழ்ப்பள்ளி மாணவர் களுக்காக நடத்தப்படும் அறிவியல் விழா குறித்து ஆசிரியர் களிடையே அலட்சியப் போக்கு இருக்கக்கூடாது என்று அதன் ஏற்பாட்டுக் குழுவினர் நேற்று சாடினர். அஸ்தியின் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் அறிவியல் விழா நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி ரீதியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில ரீதியிலும் அதன் பின்னர் தேசிய ரீதியிலான போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர். தமிழ்ப்பள்ளிகளில் இந்த அறிவியல் விழா தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவதால் நமது மாணவர்கள் தற்போது அனைத்துலக ரீதியில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அம்மாணவர்களின் சாதனைகள் குறித்து அடிக்கடி பத்திரிகைகள், வானொலி என அனைத்திலும் வெளியாகுகின்றன. இருந்த போதிலும் இந்த அறிவியல் விழாவிற்கு மாணவர்களை அனுப்பி வைப்பதில் ஒரு சில பள்ளிகளின் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் அலட்சியம் காட்டிதான் வருகின்றனர். சிலாங்கூரில் 95 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அதே போன்று கோலாலம்பூரில் 15 பள்ளிகள் உள்ளன. இவ்விரு மாநிலங்களில் உள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியர் களால் நடத்தப்பட்ட அறிவியல் விழா தொடர்பான விளக்கக் கூட்டத்தில் 73 பள்ளிகளை பிரதிநிதித்து மட்டுமே ஆசிரியர் கள் கலந்து கொண்டனர். இதர பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் ஏன் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது கேள்வி குறி தான் என அவ்விரு மாநிலங் களின் அறிவியல் விழா ஏற்பாட்டு இயக்கமான பேரின்பம் மலேசியா வின் தலைமை செயலாளர் எஸ். குபேரன் கூறினார். அறிவியல் விழாவின் தலைமை நீதிபதி ராஜேஷ் இந்நிகழ்வில் ஆசிரியர் களுக்கு அறிவியல் விழா குறித்த அனைத்து விளக்கங்களை தந் தார். அதே வேளையில் பள்ளியில் நடத்தப்படும் போட்டியாளர் களுக்கான பரிசுகளும் முன் கூட்டியே வழங்கப்பட்டன. மேலும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இப்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் நடத்தப்படும் இந் நிகழ்வை ஒரு சில பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிப்பது எங்களை போன்ற ஏற்பாட்டா ளர்களுக்கு பெரிய ஏமாற் றத்தை அளிக்கிறது. ஆகவே கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய இரு மாநிலங் களில் இருந்து அனைத்து பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று குபேரன் கேட்டுக் கொண்டார். இதனிடையே அறிவியல் விழா தொடர்பான சிறப்பு கருத்தரங்கின் விழா ஒருங்கிணைப்பாளர் செல்வேந் திரன், சங்கத்தின் துணைத் தலைவர் ஜெயராமன், உதவித் தலைவர் நித்யானந்தன், மகளிர் பிரிவுத் தலைவி மல்லிகா உட் பட பலர் கலந்து கொண்டனர்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
அனைத்துலக இளைஞர் அறிவியல் மாநாடு

யுவராஜன் லண்டன் பயணம்

மேலும்
img
நாளை சரித்திரம் கூறும் பெண்களாக திகழ்வோம்.

மூவின மக்கள் வாழும் சமுதாயத்தினரிடையே என் திறமையை

மேலும்
img
சிவானந்தா ஆசிரமத்தின் பாலர் பள்ளி விளையாட்டுப் போட்டி.

பாலர் பள்ளி யின் தலைமையாசிரியர் வடிவேலு நிகழ்ச்சியை சிறப்பாக

மேலும்
img
சுபாஷினி மனிதவளத் துறையில் பட்டம்

இப்பட்டம் பெற்றதன் வழி பெற்றோர்கள் அன்பழகன் கமலாட்சி தம்பதியருக்கு

மேலும்
img
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கம் பெற்று சாதனை!

சுந்தரேஸ் குமார் த/பெ கலைக்குமார், தமிழ் முகிலன் த/பெ தமிழ்ச்செல்வன் இ

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img