ஞாயிறு 19, நவம்பர் 2017  
img
img

ஆயர் ஈத்தாம் தமிழ்ப்பள்ளி இணைக் கட்டடத்திற்கு தகுதி சான்றிதழ் கிடைக்காதது ஏன்?
சனி 25 பிப்ரவரி 2017 13:24:08

img

ஆயர் ஈத்தாம் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு வெ. 13 இலட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட 6 வகுப்பறைகளைக் கொண்ட புதிய இணைக் கட்டடத்திற்கு அனுமதி தகுதி சான்றிதழ் கிடைக்காததால் மாண வர்கள் பரிதவிப்புக் குள்ளாகியிருப்பதாக புகார் கூறப்பட்டது. பகாவ், ஆயர் ஈத்தாம் தோட்ட தமிழ்ப் பள்ளியின் இணைக் கட்டடம் கட்டி முடிக் கப்பட்டு 15 மாதங் களாகியும் இன்னும் மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாக குழு உறுப்பினர் முரளி தங்கையா புகாரை முன் வைத்தார். கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் பூமி பூஜையும் கட்டி முடிந்த பிறகு கிரகப் பிரவேசமும் கல்வி துணை யமைச்சர் டத்தோ கமலநாதன் தலைமையில் நடைபெற்றதாக அவர் தெரிவித்தார். சுமார் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் இட பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கத்தில் கட்டப்பட்ட இணை கட்டடம் இன்னும் பயன்படுத்த முடியாமல் பாழடைந்து அவல நிலையில் இருந்து வருவ தாக அவர் குறிப்பிட்டார். ஜெம்போல் நாடாளுமன்றத்தி லுள்ள ஜெரம் பாடாங் சட்டமன்ற தொகுதியிலுள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கு கடந்த வாரம் மானியம் வழங்கும் நிகழ்வில் இந்த பள்ளியின் அவல நிலை குறித்து கல்வி அமைச்சர் டத்தோ கமல நாதனிடம் நேரடியாக வினா எழுப்பியபோது பதில் அளிக்காமல் வெளியேறியதாக முரளி தங்கையா கூறினார். இக்கூட்டத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி இலாகா அதிகாரி முன்னிலையில் மக்களுடன் நெருங்கி பழக கூடிய ஒரு நல்ல தலைவராக செயல் படுவதாக டத்தோ கமலநாதன் மூன்று மொழிகளிலும் தன்னைத் தானே புகழ்ந்து பேசியதை நம்பி ஆயர் ஈத்தாம் தோட்ட தமிழ்ப் பள்ளி இணை கட்டடம் பிரச்சினை முன் வைத் ததும் சரியான விளக்கம் சொல்லாமல் வெளியேறியதாக அவர் சொன்னார். இந்த புதிய இணை கட்டட மேல் கூரை பகுதி சேதமடைந்து வருவதுடன் குத்தகையாளர் முறையாக கட்டப் படாததால் அனுமதி தகுதி சான்றிதழ் வழங்குவதற்கு ஜெம்போல் மாவட்ட மன்றம் இழுபறி நிலையில் மறுத்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
அனைத்துலக இளைஞர் அறிவியல் மாநாடு

யுவராஜன் லண்டன் பயணம்

மேலும்
img
நாளை சரித்திரம் கூறும் பெண்களாக திகழ்வோம்.

மூவின மக்கள் வாழும் சமுதாயத்தினரிடையே என் திறமையை

மேலும்
img
சிவானந்தா ஆசிரமத்தின் பாலர் பள்ளி விளையாட்டுப் போட்டி.

பாலர் பள்ளி யின் தலைமையாசிரியர் வடிவேலு நிகழ்ச்சியை சிறப்பாக

மேலும்
img
சுபாஷினி மனிதவளத் துறையில் பட்டம்

இப்பட்டம் பெற்றதன் வழி பெற்றோர்கள் அன்பழகன் கமலாட்சி தம்பதியருக்கு

மேலும்
img
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தங்கம் பெற்று சாதனை!

சுந்தரேஸ் குமார் த/பெ கலைக்குமார், தமிழ் முகிலன் த/பெ தமிழ்ச்செல்வன் இ

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img