புதன் 13, டிசம்பர் 2017  
img
img

புலிகளுக்கு எதிரான யுத்தம்: இலங்கைக்கு 80% பயிற்சி அளித்தது இந்தியாவே.
சனி 25 பிப்ரவரி 2017 12:46:41

img

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சி கொடுத்தது இந்தியா தான் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலரும் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான போரில் சீனா, பாகிஸ்தான், உக்ரேன், ரஷ்யா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங் கைக்கு ஆயுதங்களை வழங்கின. அப்போது இந்தியாவோ இலங்கை ராணுவத்தினருக்கு மிக முக்கியமான பயிற் சிகளை வழங்கியது. பல ஆண்டுகளாக இந்தியாதான் இலங்கை ராணுவத்துக்கு 80% பயிற்சிகளை வழங்கியது. தமிழகத்தின் நெருக்கடியால் இந்தியாவில் இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்க முடியவில்லை. இருப்பினும் எங்களது ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல உதவிகளை செய்தது இந்தியா. சீனாவின் ஆயுதங்களைத்தான் நாங்கள் பிரதானமாக பயன்படுத்தினோம். சீனாவையே நாங்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தோம். இவ்வாறு கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கை கடற்கரையில் கரையொதுங்கும் பாம்புகள்

கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமிப் பேரழிவின்போதும்

மேலும்
img
இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 20 பேருக்கு டிசம்பர் 15-ம் தேதி வரை காவல்

ருத்தித்துறை கடல் பகுதியில் மீன்பிடித்தவர்களின்

மேலும்
img
இறுதிகட்ட போரில் தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது உரிய நடவடிக்கை

இலங்கை அதிபர்

மேலும்
img
இலங்கையில் பாதுகாப்பு படையால் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாலியல் சித்தரவதை

இலங்கையில் பாதுகாப்பு படையினரால் விசாரணை என்ற பெயரில் கொடூரமான

மேலும்
img
இலங்கை அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img