வெள்ளி 17, ஆகஸ்ட் 2018  
img
img

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதபோது காளி, துர்காவை வணங்குவது சரியா?
வெள்ளி 24 பிப்ரவரி 2017 13:41:11

img

நடிகை பாவனா மானபங்கப்படுத்தப்பட்டது குறித்து நடிகை லட்சுமி மஞ்சு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நடிகை பாவனா கடத்தி, மானபங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாம் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண் டியுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். அவரின் நிலையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். நம் நாட்டில் ஒன்று பெண்களை கடவுளாக வணங்குகிறார்கள் அல்லது வீட்டிற்குள் வைத்து பூட்டுகிறார்கள். அதிர்ஷ்டசாலிகள் தாயாக, தாரமாக மதிக்கப்படுகிறார்கள். அவ்வளவு தானா பெண்கள்? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நேரத்தில் கடவுள் லட்சுமி, பார்வதி, துர்கா, சரஸ்வதி மற்றும் காளியை தொடர்ந்து வணங்குவது சரியா? பல பெண்கள் மானபங்கப்படுத்தப்படுதல், பலாத்காரம் செய்யப்படுதல், அவ மதிக்கப்படுதல் உள்ளிட்ட செய்திகளை காலையில் எழுந்து செய்தித்தாள்களில் படிப்பது சாதாரணமாகிவிட்டது. மலையாள திரையுலக உறுப்பினருக்கு நடந்த சம்வம் முதலும் அல்ல இதுவே கடைசியும் அல்ல. நான் எவ் வளவு பாதுகாப்பு இல்லாமல் உணர்கிறேன் என்பதை இந்த தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். தெருவில் தனியாக செல்ல, அரசு போக்குவரத்தில் பயணம் செய்ய, தெருவில் பசங்க கும்பலாக இருந்தால் நடந்து செல்ல, நமக்கு பிடித்த உடை அணிய பயப்படுகிறோம். இருட்டிவிட்டால் வீட்டில் இருக்க வேண்டும், மது அருந்தக் கூடாது, ஒழுங்காக உடை அணிய வேண்டும், புகைப்பிடிக்கக் கூடாது, அதிகம் சிரிக்கக் கூடாது என்று பெண்களிடம் கூறுவது தீர்வாகாது. நாம் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும், எது சரி என்பதை புரிந்து கொள்ள வேண்டும், நல்ல எதிர்காலத்திற்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார் லட்சுமி.

பின்செல்

img
எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம்ஜிஆர்.’

இத்திரைப்படத்தில் எம்ஜிஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குனர்

மேலும்
img
பாடாய் படுத்தியெடுத்த சென்சார் யூஏ சான்றிதழுடன் திரும்பியது ‘

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’!

மேலும்
img
“வில்லனாக நடிக்கவே விருப்பம்” ; களத்தூர் கிராமம் மிதுன்குமார் 

அவரது சொந்தக்கதை சோகக்கதை ஒன்றும் ஒளிந்துள்ளது..

மேலும்
img
'குரு உட்சத்துல இருக்காரு'. இசைவெளியீட்டு விழா

திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்

மேலும்
img
விழித்திரு விமர்சனம்

வெளிநாட்டுக்கு செல்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணா

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img