img
img

பெண் பொலிஸை கூட்டாக கற்பழித்த 5 பொலிஸ் அதிகாரிகள்
வியாழன் 16 பிப்ரவரி 2017 14:17:19

img

மெக்சிகோவில் தங்களுடன் பணிபுரியும் பெண் பொலிஸ் அதிகாரியை ஐந்து ஆண் பொலிஸ் அதிகாரிகள் கூட்டு பலாத்காரம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோ நாட்டின் Tabasco மாநிலத்தில் உள்ள பொலிஸ் அகாடமியில் பல பொலிசார் தங்கியுள்ளார்கள். கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அங்கு தங்கியிருந்த ஒரு பெண் பொலிஸ் அதிகாரியின் அறைக்கு சென்ற ஐந்து அதிகாரிகள் அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக போதை பொருட்களை வாயில் திணித்துள் ளனர்.பின்னர் ஐந்து அதிகாரிகளும் சேர்ந்து கூட்டாக அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். இது சம்மந்தமான வீடியோவை அப்போது அவர்கள் எடுத்துள்ளனர். இந்த விடயத்தை அவமானம் கருதி வெளியில் இத்தனை நாட்கள் சொல்லாமல் இருந்து வந்த பாதிக்கப்பட்ட பெண் தற்போது அவர் கற்பழிக்கப்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் கசிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து அவர் புகார் அளிக்க ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img