வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

விடுதலைப் புலிகளின் ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டது எப்படி..?
சனி 11 பிப்ரவரி 2017 15:00:19

img

ஈழப்போரில், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்ற தகவல்களை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அவர் எழுதி வெளியிட்டுள்ள Asymmetric Warfare At Sea: The Case of Sri Lanka என்ற நூலில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலைப் புலிகளின் மிதக்கும் இந்த ஆயுத களஞ்சியசாலைகள் அழிக்கப்பட்டமையினால், புலிகளின் ஆயுதப் பரிமாற்றல் மற்றும் வெடி பொருட்கள் வழங்குதல் என்பன தடுக்கப்பட்டன. மரபுவழி இராணுவங்கள் பொதுவாக தமது வெடிபொருட்களைப் பயன்படுத்துவதில் வழக்கமாக கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டை அவர்கள் விடுதலைப் புலிகள் கடைப்பிடிக்கவில்லை. இதன் காரணமாக இலங்கை படையினருக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகம். இதுவே, விடுதலைப் புலிகளின் ஆயுத மற்றும் வெடிபொருள் வழங்கலை கடற்படை துண்டிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக மாறியது. விடுதலைப் புலிகள் தமது வெடிபொருட்களை அனைத்துலக கடற்பரப்பில் பிரதான கப்பல் பாதைகளுக்கு அப்பால் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில், சேமித்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது, அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான பூகோள போரை பயன்படுத்தி, அமெரிக்கத் தூதுவர் மற்றும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகரிடம் உதவி கோரப்பட்டது. இது தொடர்பான தகவல்களை வழங்க அவர்கள் இணங்கினார்கள். எனினும், புலிகளின் கப்பல்களை மட்டுமே அழிக்கவேண்டும் எனவும், அப்பாவிகளின் கப்பல்களையோ, சிவிலியன் கப்பல்களையோ நாம் அமெரிக்கா 100 வீதம் உறுதியாக இருந்தது. இதன்படி, சந்தேகத்துக்குரிய சில கப்பல்களை கண்டறிந்துள்ளதாக தெரிவித்து 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா தரப்பிலிருந்து ஒரு புலனாய்வு அறிக்கை கிடைக்கப்பெற்றது. எனினும், இலங்கை கடற்படையினருக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்தது. கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் பயன்படுத்திய நிலையிலேயே வாங்கப்பட்டவை. அவை பழையவையாக இருந்ததால், நீண்டநாட்கள் பயணிப்பதால் சிக்கல்கள் வரலாம். மேலும், விடுதலைப் புலிகளுக்கு தகவல் கசிந்து விடும் என்பதால், வெளிநாட்டுத் துறைமுகங்களில் எரிபொருள் மீள் நிரப்புவது குறித்து யோசிக்கப்படவேயில்லை. பாரிய கலிபர் பீரங்கிகளோ, கப்பல்களுக்கு எதிரான ஏவுகணைகளோ ஆழ்கடல் ரோந்துப் படகுகளில் இல்லாத நிலையில், அவற்றில் உள்ள ஆயுதங்களையே பயன்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இவற்றுக்குத் துணையாக சிறப்பு படகு படையணியின் படகுகளை ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களில் ஏற்றிச் செல்லவும் திட்டமிடப்பட்டது. விடுதலைப் புலிகளின் கப்பல்களை எடுத்து வர இந்தப் படகுகள் அனுப்பப்படவிருந்தன. சண்டைக்கான இறப்பர் படகுகளில் விடுதலைப் புலிகளின் கப்பல்களை நெருங்கிச் சென்று ஆர்பிஜி தாக்குதல் நடத்தி மூழ்கடிப்பதெனவும் திட்டமிடப்பட்டது எனவும் அவரது நூலில் தெரிவித்துள்ளார். திட்டமிட்டப்படி, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் அழிக்கப்பட்டதுடன், ஒக்டோம்பர் மாதம் 17ஆம் திகதி மற்றுமொரு கப்பல் வீழ்த்தப்பட்டது. இதேபோன்று 2006ஆம் ஆண்டு ஆரம்பத்திலும், 2007ஆம் ஆண்டு ஆரம்பத்திலும் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் அழிக்கப்பட்டிருந்தன. அழிக்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில், புலிகளின் பெருமளவிலான ஆயுதங்கள் இருந்தன. மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களின் அழிப்பு அனைத்துலக அளவில் புயலை ஏற்படுத்தவில்லை எனவும், கடற்படை புலிகளின் ஆயுதக் கப்பல்களையே அழித்தது, சிவிலியன் கப்பல்களை தாக்கவில்லை எனவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த தகவல், புலிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டமை, போரை நிறுத்துமாறு மகிந்தவுக்கு அழுத்தங்களைக் கொடுத்தது, புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அவரது சகாக்களையும் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு கொண்டு செல்ல முயன்றது என சிங்களத் தேசியவாதிகள் மத்தியில் பொதுவாக உள்ள கருத்தை, இல்லாமல் செய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
ரணில்-ராஜபக்சே எம்பிகள் மோதல்: சபாநாயகர் மீது தாக்குதல்...

இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது

மேலும்
img
ராஜபக்சேக்கு கல்தா. ரணிலுக்கு மிகப்பெரிய வெற்றி.

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு

மேலும்
img
தந்தையை கைவிட்டு மகிந்தவுடன் இணையும் மைத்திரி மகள் 

மகிந்த ராஜபக்சே தலைமையேற்கும் பொதுஜன

மேலும்
img
இலங்கை அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது

ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி கட்சியான

மேலும்
img
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மக்களின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img