ஞாயிறு 17, டிசம்பர் 2017  
img
img

அனைத்துலக தேக்குவாண்டோ போட்டி
ஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:48:45

img

அனைத்துலக தேக்குவாண்டோ போட்டியில் களமிறங்கிய மலேசிய மாணவர்கள் 16 தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனையை பதிவு செய்துள்ளனர்.அனைத்துலக தேக்குவாண்டோ போட்டி இரு நாட்களுக்கு மதுரையில் நடைபெற்றது. மலேசியா, இந்தியாவில் இருந்து மொத்தம் 200 மாணவர்கள் இங்கு கலந்து கொண்டனர். மலேசியாவில் தேக்குவாண்டோ போட்டிகள் அதிகமாக நடைபெற்றாலும், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்போட்டி பிரமாண்ட மான முறையில் நடத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அதிகமான தேக்கு வாண்டோ போட்டிகள் இந்தியாவில் நடத்து வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனைத்துலக சங்கங்கள் உறுதியளித்துள்ளன.மலேசியாவில் இருந்து ஜாகோ அகாடமி அணியினர் இப் போட்டியில் களமிறங்கியது டன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றுள்ளனர். மாஸ்டர்கள் ஆர். செல்வமுத்து, மாஸ்டர் திலகவதி ஆகியோரின் தலைமையில் இம்மாணவர்கள் இப்போட்டியில் களமிறங்கி 16 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று புதிய சாதனையை படைத்துள்ளனர்.கோலாலம்பூர் அப்பர் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா நாதன், கான்வெண்ட் செந்தூல்-2 தேசியப் பள்ளியைச் சேர்ந்த விஸ்ஷா செல்வமுத்து, காஜாங் கான்வெண்ட் தேசியப் பள்ளியைச் சேர்ந்த ரீயா எமீரா ஷாமீர், தானாரத்தா அனைத்துலகப் பள்ளியைச் சேர்ந்த இஷான் ஜெய்ரூபேந்திரன், நெமிஷா ஜெய்ரூபேந்திரன், காஜாங் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த பிரவீணா முருகன், செந்தூல் கான்வெண்ட் தேசிய இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த தாஷா செல்வ முத்து, காம்ப்ளக்ஸ் கேஎல்ஐஏ. தேசியப் பள்ளியைச் சேர்ந்த மார்ஷயா நூர் ஆகி யோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். காஜாங் சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா இடைநிலைப் பள்ளியின் அலீயா அட்ரியானா, கோலாலம்பூர் மெதடிஸ் இடைநிலைப்பள்ளியின் தஷ்வின் நாதன், ஜாலான் புக்கிட் பிந்தாங் இடைநிலைப்பள்ளியின் அலீப் பட்ரிஸ் துன் ஹுசேன் ஓன் இடைநிலைப் பள்ளியின் தினேஷ்குமார் முருகன், காம்ப்ளக்ஸ் கேஎல்ஐஏ தேசியப்பள்ளி யின் கைஷுரான் முகமட் அனிக், டெய்லர் காலே ஜைச் சேர்ந்த விக்னேஸ் வரன் நாதன் ஆகியோரும் தத்தம் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர். மார்ஷயா நூர், தாஷா செல்வ முத்து ஆகிய இருவரும் சிறந்த தேக்குவாண்டோ வீரர்களுக்கான விருதுகளையும் வென்றனர்.இதனிடையே தேக்குவாண்டோ போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அப்பர் தமிழ்ப்பள்ளி மாணவி ஸ்ரீவித்யாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியையும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் நாதன் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
கட்டொழுங்கில்லாத ஆட்டக்காரர்களை நீக்க தயங்கக் கூடாது

இப்படிப்பட்ட ஆட்டக்காரர்களை நீக்குவதால்

மேலும்
img
சாதனை புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்

கைரூல் ஹபிசின் சாதனைகளை முறியடிக்கும் இலக்குடன்

மேலும்
img
கராத்தே விளையாட்டுப் போட்டி, ஆர். கங்கா தரன், எஸ். சிவபூரணி ஆகியோர் தங்கப்பதக்கம்

ஷீகோகாய் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டிலான

மேலும்
img
சோங் வெய் அபார வெற்றி

14, 21-19 என்ற புள்ளிகளில் சோங் வெய்

மேலும்
img
உலக சாதனையை நோக்கி மாய வித்தகன் விக்கி

12 பூட்டுகள் போடப்பட்ட நிலையில் சவப்பெட்டிக்குள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img