புதன் 22, ஆகஸ்ட் 2018  
img
img

கோஹ்லிகிட்ட வாய் கொடுக்காதீங்க.. வாயில் புண்ணோடு ஊர் போய் சேராதீர்கள்..
ஞாயிறு 05 பிப்ரவரி 2017 11:11:26

img

இந்திய கேப்டன் விராட் கோஹ்லியிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதை தவிர்ப்பதே நல்லது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்சி தனது நாட்டு அணியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் நடுவேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாத இறுதியில் இந்தியாவில் தொடங்க உள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை, ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சந்திக்க உள்ளது. கோஹ்லி தனது உச்சகட்ட ஃபார்மில் உள்ளார். எனவே எப்போதுமே எதிரணிகளின் பெஸ்ட் பேட்ஸ்மேன்களை மனதளவில் காயப்படுத்தி கவனத்தை திசைதிருப்பும் யுக்தியை கோஹ்லியிடமும் கையிலெடுக்கலாம் என ஆஸ்திரேலிய அணி திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அளித்த பேட்டியொன்றில், கோஹ்லியை கோபப்படுத்தி பார்க்கவே விரும்புவதாகவும், சீண்டுவதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு கூடும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிகள் பலவற்றில் ஆடி அனுபவமுள்ள ஹஸ்சி கருத்தோ வேறாக உள்ளது. அவர் கூறுகையில், கோஹ்லியை சீண்டுவது, ஸ்லெட்ஜிங் செய்வது மோசமான ஐடியா. கோஹ்லியிடம் வாலாட்டினால் அவரது ஆக்ரோஷ வேகம் இன்னும் அதிகரித்துவிடும். இது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் ஆபத்தாக முடியும். கோஹ்லி எப்போதுமே போட்டியை விரும்புபவர். எதிரே சேலஞ்ச் வைக்கப்பட்டால், அதை உடைத்து, எறிந்து வெற்றி பெறுவதில் அவருக்கு அலாதி பிரியம். இப்படிப்பட்ட ஒரு வீரரிடம் தானாக போய் வாய் கொடுத்து மாட்டிக்கொள்வது சரியான செயல்பாடு கிடையாது. எனவே, ஆஸ்திரேலிய அணி தனது கேம் பிளானில் கவனம் வைக்க வேண்டுமே தவிர, மைண்ட் கேம் ஆடக்கூடாது. இவ்வாறு ஹஸ்சி கூறியுள்ளார். 2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினரால் தொடர்ந்து ஸ்லெட்ஜிங்கிற்கு உட்படுத்தப்பட்டார் கோஹ்லி. அந்த தொடரில் கோஹ்லி மொத்தம் 639 ரன்களை குவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிரணி வீரர் ஸ்டோக்ஸ் அவரிடம் வாலாட்டினார். இத்தொடரில் 655 ரன்களை குவித்தார் கோஹ்லி. இதில் அவரது பெஸ்ட்டான 235 ரன்களும் உள்ளடங்கும்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷகிலா தலைமையில் மலேசிய அணிவகுப்பு.

மலேசியாவின் 114 போட்டியாளர்களும்

மேலும்
img
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மூக்கை மாற்றிக் கொண்டிருக்கிறார்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின்

மேலும்
img
சாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்

சிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்

மேலும்
img
காமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா

பளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்

மேலும்
img
காமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா

இந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img