கோலாலம்பூர், ஜன. 20- எம்எச் 370 விமானத்தை தேடும் படலம் தொடருமா - தொடராதா என்று மாயமாகிப் போன பயணிகளின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர். விமானத்தை தேடும் படலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் தேடும் பணி தொடரலாம் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்த போதிலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். 2014ஆம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு சென்ற எம்எச் 370 விமானத்தில் பயணம் செய்த 239 பேர் காணாமல் போய்விட்டனர்.தேடுதல் நடவடிக்கையினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா, ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. எனினும் இதன் தொடர்பிலான நீரடி தேடுதல் சாத்தியம் உள்ளதாக ஆஸ்திரேலிய போக்குவரத்து அமைச்சர் டாரென் ஷெஸ்டா தெரிவித்தார். தேடுதல் படலத்தை நிறுத்தியதற்கு செலவினம் ஒரு காரணமல்ல. இந்த தேடுதல் படலத்திற்கு பயன்படுத்திய பணம் 150 மில்லியன் யு.எஸ்.டாலர். தேடுதல் நடவடிக்கையினை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டுமானால் குறிப்பிட்ட பகுதி சம்பந்தமாக நம்பகமான புதிய தகவல் தேவைப்படுகிறது என்று போக்குவரத்து அமைச்சர் டாரன் செஸ்டர் சுட்டிக்காட்டி யிருந்தார். இது ஒரு கபடமான அறிக்கை என்று காணாமல் போன பயணிகளில் ஒருவரின் மகன் கிரேஸ் நாதன் குறை கூறினார். முதலாவதாக இவர்களிடம் நம்பகமான புதிய ஆதாரங்கள் இல்லை. இவ்விவகாரத்தை இப்போது புறக்கணிக்க இவர்கள் முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. காணாமல் போன விமானத்திலிருந்து வந்த குப்பைகள் கிழக்கு ஆப்பிரிக்க கடலோரத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தேடும் படல பகுதிக்கு அப்பாற்பட்டது இது. இவர்கள் எல்லாம் எத்தகைய புதிய தகவலை கண்டுபிடிக்க முற்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. தேடும் படலத்தை மறுபடியும் துவங்கும் வண்ணம் புதிய தகவலை தேடுவதற்கு எந்தவொரு ஆக்ககரமான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்கிறார் கிரேஸ் நாதன். விமான பணிப்பெண் கிறிஸ்டின் டானின் கணவர் கேல்வின் சிம், தற்போது சம்பந்தப்பட்ட தரப்பு எடுத்த முடிவு குறித்து இவர் ஏமாற்றம் தெரிவிக்கிறார். விமானத்தை தேடும் முயற்சிகளுக்காக தானும் தனது இரண்டு பிள்ளைகளும் நன்றிக் கடன்பட்டுள்ளோம் என்று கேல்வின் எம் குறிப்பிடுகிறார். எனினும் வித்தியாசமான வியூகங்களுடன் தேடுதல் நடவடிக்கை தொடர வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கிறார்.
நேற்று முன்தினம் இங்கு நிகழ்ந்த சாலை ...
மேலும்எம்எச் 370 விமானத்தை தேடும் படலம் தொடருமா - தொடராதா என்று மாயமாகிப் போன
மேலும்தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்
மேலும்