ஞாயிறு 24, செப்டம்பர் 2017  
img
img

ஆஸ்கர் நாயகன் இசையில் மீண்டும் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி பாலிசி
புதன் 18 ஜனவரி 2017 11:09:01

img

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மீணடும் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி பாலிசி பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடல் ரசிர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 1994-ம் ஆண்டு ரஹ்மான் இசையில் வெளியான பாடல் “ஊர்வசி ஊர்வசி” ஷங்கரின் “காதலன்” படத்தில் வைரமுத்துவின் வரிகளுடன் இடம்பெற்றிருந்த இப்பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி இருந்தது. இந்நிலையில் ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப பாடல் வரிகளை தருமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து பல வரிகளை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இந்த வரிகளில் ஒரு சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து புதிய பாடலில் இணைத்துள்ளார். காதலன் படத்தில் ஊர்வசி ஊர்வசி பாடலை பாடிய ரஹ்மானின் நண்பரும், இசையமைப்பாளருமான சுரேஷ் பீட்டர்ஸ் மற்றும் இசையமைப்பாளர் ரஞ்சித் பரோட் உள்ளிட்டோர் ரஹ்மானுடன் இணைந்து இந்த புதிய பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலை MTv India முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஓகே ஜானு படத்திற்கு ரஹ்மானின் ஹம்மா ஹம்மா பாடல் ரிமேக் செய்யப்பட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

பின்செல்

கோலிவுட் செய்திகள்

img
நிபுணன் சினிமா விமர்சனம்

கொலைக்குற்றவாளியை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான படம் நிபுணன்.

மேலும்
img
'திருட்டுப் பயலே 2' டீஸரை வெளியிடும் அமலா பால்!

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிப்பில் பாபி சிம்ஹா

மேலும்
img
நடனத்தில் சிம்பு செய்த சாதனை!

இரண்டு பாகமாக வெளிவரயிருக்கும் முதல் சிம்பு படம்

மேலும்
img
ஹீரோயின்களுக்கு மரியாதையான ரோல் கொடுங்கள்

- ஜோதிகா சாட்டையடி!

மேலும்
img
எனக்கு அது வேண்டும்... தருகிறீர்களா?

வௌிப்டையாக என கேட்ட பாரதிராஜா பட ஹீரோயின்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img