ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

பிறப்புப் பத்திரம் இல்லையெனில் மாணவர்களை பதிய முடியாது! - கல்வி அதிகாரி திட்டவட்டம்
புதன் 11 ஜனவரி 2017 13:48:02

img

( பெ.ஆறுமுகம் ) சிப்பாங், ஜன. 11- சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் கல்வியினைத் தொடரவிருக்கும், பிறப்புப் பத்திரம் இல்லாத மாணவர்கள் தத்தம் மாவட்டத்தில் உள்ள கல்வி இலாகாவின் மூலமாக விண்ணப்பம் செய்வது கட்டாய விதிமுறையாகும் என சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் ஆரம்பப்பள்ளிப் பிரிவின் அதிகாரி முகமட் மோராட் நேற்று திட்டவட்டமாகக் கூறினார். பிறப்புப் பத்திரம் உட்பட பல்வேறு காரணங்களால் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றாலும் அவ்வாறான மாணவர்கள் குறித்த எல்லா விவரங்களையும் மாவட்ட கல்வி இலாகாவில் தெரிவிப்பதுடன் அதற்கான பாரத்தையும் பூர்த்தி செய்வது அவசியமாகும். மாவட்ட கல்வி இலாகாவில் செய்யப்படும், பெற்றோரின் இந்த விண்ணப்பங்களை மாநில கல்வி இலாகா பரிசீலித்து ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் பள்ளிக்குச் செல்வதற்குறிய கட்டணமாக ஆண்டுக்கு வெ.120-ஐயும் செலுத்த வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்தார். இக்கட்டணம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு பிறப்புப் பத்திரம் கிடைக்கும் வரை செலுத்த வேண்டிய ஒரு தொகையாகும். கட்டணம் செலுத்திய பிறகு, மாநில கல்வி இலாகா வழங்கும் அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்துடன் பள்ளிகளுக்குச் சென்றால் மட்டுமே அங்குள்ள தலைமையாசிரியர் அம்மாணவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியும் என்பது மாநில கல்வி இலாகாவின் விதிமுறைகளில் ஒன்றாகும் என நேற்று இங்கு சுங்கை பீலேக்கில் உள்ள தெலுக் மெர்பாவ் தமிழ்ப் பள்ளியில் நடைபெற்ற இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட முகமட் மோராட் இத்தகவலை தெரிவித்தார்.

பின்செல்

உள்ளூர் செய்திகள்

img
கோர விபத்து! இரண்டு மாத கைக் குழந்தை தாயின் மடியில் மரணம்!

நேற்று முன்தினம் இங்கு நிகழ்ந்த சாலை ...

மேலும்
img
14 ஆண்டுகளில் 256 பேர் போலிஸ் காவலின்போது மரணம்?

போலீஸ் காவலின் போது மரணமடையும் ..

மேலும்
img
எம்எச் 370 தேடுதல் படலம் தொடருமா -தொடராதா?

எம்எச் 370 விமானத்தை தேடும் படலம் தொடருமா - தொடராதா என்று மாயமாகிப் போன

மேலும்
img
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம்! 200க்கும் மேற்பட்டோர் பத்துமலையில் திரண்டனர்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை ஆதரிக்கும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img