img
img

இலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும் 
செவ்வாய் 28 மே 2019 18:41:39

img

கொழும்பு, 

இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில்  கடந்த மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில்  மனித குண்டு தீவிரவாதிகள் 9 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், 250 பேர்  பலியாயினர். 

எஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில், இலங்கையில் உள்ள தேசிய தவுஹீத் ஜமாத் அமைப்பு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்நிலை யில், இலங்கை தலைநகர் கொழும்பில் சிவில் சொசைட்டி பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், ரணில் அளித்த பேட்டியில் கூறியதாவது: 

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதோடு இந்த தீவிரவாதம் முடிந்துவிட்டது என அர்த்தம் அல்ல. இலங்கையில் மீண்டும் ஐ.எஸ் தீவிரவாதம் தலைதூக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. 

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலை பாதுகாப்பு படைகள் தடுக்கத் தவறியது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை மக்கள் ஆதரிக்கக் கூடாது. ஐ.எஸ் தீவிரவாதம் இலங்கையில் மீண்டும் தலை தூக்காத வகையில் நெறிமுறைகள் வகுக்கப்படும் என அவர் கூறினார்.

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
img
பதவி விலகப் போவதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் எச்சரிக்கை 

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது

மேலும்
img
அதிபரும் விசாரணைகளுக்காக அழைக்கப்படுவார் 

வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் சாட்சியமளிப்பதற்கு

மேலும்
img
இலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு

இந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்

மேலும்
img
இலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு  கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை!

- மருத்துவர் கைது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img