img
img

இங்கிலாந்தில் சாலையில் விழுந்த விமானம் 
புதன் 15 மே 2019 15:28:40

img

லண்டன்,

இங்கிலாந்தில் நிலைதடுமாறிய விமானம் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள மான்மவுத்ஷைர் நகரில் இருந்து, சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இதில் ஒரு விமானியும்  ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் அதன் இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் தாழ்வாக பறந்த விமானம் மின்கம்பிகளின் மீது உரசியது. 

இதையடுத்து, விமானத்தை அருகில் உள்ள இருவழி சாலையில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சித்தார். ஆனால் நிலைதடுமாறிய விமானம் சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. விமானம் விழுந்தபோது சாலையில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

இதற்கிடையில், அந்த வழியாக காரில் பயணித்தவர் சாலையில் விமானம் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அவர் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட்டு, விமானத்துக்குள் சிக்கியிருந்த 3 பேரையும் பத்திரமாக மீட்டார். அவர்கள் மீட்கப்பட்ட சில நொடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானம் முற்றிலுமாக எரிந்து நாசமானது.   எனினும் பலத்த காயம் அடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img