வியாழன் 18, ஜனவரி 2018  
img
img

மலேசிய கால்பந்து சங்கத்தின் புதிய தலைவர் யார்?
புதன் 09 நவம்பர் 2016 14:20:00

img

மலேசிய கால்பந்து சங்கத்தின் 53ஆவது பேராளர் மாநாடு புதிய தலைவரை தேர்வு செய்யும் தளமாக விளங்கும் என்று துணைத் தலைவர் டத்தோ அபென்டி ஹம்சா நேற்று கூறினார். தேசிய கால்பந்து அணியின் தொடர் சரிவுகளை தொடர்ந்து எப்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்க நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக மலேசிய கால்பந்து சங்கத்திற்கு புதியவர் ஒருவர் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும். அதே வேளையில் நடப்பு தலைவர் தெங்கு அப்துல்லா அப்பதவியை மற்றவர்களுக்கு விட்டுத் தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு மலேசிய கால்பந்து சங்கத்தின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 25ஆம் தேதி மலேசிய கால்பந்து சங்கத்தின் 53ஆவது பேராளர் மாநாடு நடத்தப்படவுள்ளது. இம்மாநாட்டின் போது மலேசிய கால்பந்து சங்கத்தின் புதிய தலைவரையும் பேராளர்களையும் தேர்வு செய்வார்கள் என்று டத்தோ அபென்டி கூறினார். எப்ஏஎம் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோம் வரும் ஜனவரி 23ஆம் தேதிக்கு தங்களின் வேட்புமனு தாக்கலை செய்ய வேண்டும். ஒரு மாத இடைவெளிக்கு பின் அதாவது பிப்ரவரி 23ஆம் தேதி தேர்தலில் போட்டியிடுபவர்களின் இறுதிப்பட்டியலை எப்ஏஎம் வெளியிடும் என்று அவர் தெரிவித்தார். பல சர்ச்சைகளைத் தொடர்ந்து எப்ஏஎம் தலைவர் பதவியில் இருந்து விலகுவதற்கான முடிவை தெங்கு அப்துல்லா எடுத்திருந்தார். இருந்த போதிலும் எப்ஏஎம் நிர்வாக குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு அவர் தொடர்ந்து அப்பதவியை வகித்து வருகிறார். ஆக மொத்தத்தில் மலேசிய கால்பந்து சங்கத்தில் நிலவி வரும் சர்ச்சைகளுக்கு மார்ச் 25ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று அவர் உறுதியாக கூறினார். இதனிடையே மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் பட்டியலில் ஜேடிதி அணியின் உரிமையாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் உள்ளார். ஜேடிதி அணியின் மூலம் மலேசிய கால்பந்து வரலாற்றில் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்த பெருமை துங்கு இஸ்மாயிலுக்கு உண்டு. இப்பட்டியலில் ஏர்ஆசியா விமான நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் உள்ளார். ஏர் ஆசியாவை தவிர்த்து கியூபிஆர் கால்பந்து கிளப்பின் உரிமை யாளராக டோனி உள்ளார். இவர்களைத் தவிர்த்து டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜாலா, டான்ஸ்ரீ ஆசே சீ மாட் ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
உபர் கிண்ண பூப்பந்துப் போட்டிக்கான தேசிய அணியில் இடம் பிடித்த கிஷோனா 

6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அலோர்ஸ்டாரில்

மேலும்
img
கட்டொழுங்கில்லாத ஆட்டக்காரர்களை நீக்க தயங்கக் கூடாது

இப்படிப்பட்ட ஆட்டக்காரர்களை நீக்குவதால்

மேலும்
img
சாதனை புரிந்து நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்

கைரூல் ஹபிசின் சாதனைகளை முறியடிக்கும் இலக்குடன்

மேலும்
img
கராத்தே விளையாட்டுப் போட்டி, ஆர். கங்கா தரன், எஸ். சிவபூரணி ஆகியோர் தங்கப்பதக்கம்

ஷீகோகாய் கராத்தே சங்கத்தின் ஏற்பாட்டிலான

மேலும்
img
சோங் வெய் அபார வெற்றி

14, 21-19 என்ற புள்ளிகளில் சோங் வெய்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img