img
img

நாட்டுக்கு பயன்படாத அமைச்சர்கள்  நீக்கப்படுவர் - இம்ரான்கான் அதிரடி 
திங்கள் 22 ஏப்ரல் 2019 18:34:46

img

பெஷாவர், 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான்கான், அரசியல் களத்தில் குதித்தார். கடந்த 1996-ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியை தொடங்கினார். படிப்படியாக கட்சியை வளர்த்து, 22 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்தார். தற்போது பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை திடீரென நாட்டின் நிதி அமைச்சராக இருந்து வந்த ஆசாத் உமரை இம்ரான்கான் நீக்கினார். புதிய நிதி அமைச்சராக அப்துல் ஹபீஸ் ஷேக்கை நியமித்தார். அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்களை செய்து உள்நாட்டு அரசியலை இம்ரான்கான் பரபரப்புக்கு உள்ளாக்கினார்.

இதனிடையே,  ஓரக்ஜாய் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான்,  எனது ஒரே நோக்கம், நாட்டின் முன்னேற்றம் மட்டும்தான். அதற்காகத்தான் எனது அணியில் மாற்றங்களை செய்தேன். நாட்டுக்கு பயன்படாத அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள்.  ஒரு நல்ல கேப்டன், தொடர்ந்து தனது அணியின் மீது கண்களை வைத்திருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்வேன் என்று அதிரடியான அறிவிப்பைச் செய்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கருத்துக்கணிப்புகள் ஜெயிக்குமா?

தேர்தல் முடிவுகளுக்கு முன் எதிர்க்கட்சிகள் இணைந்து

மேலும்
img
கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் மருத்துவர்கள் சாதனை

குழந்தையை ‘ஸ்கேன்’ செய்து பார்த்த மருத்துவர்கள்

மேலும்
img
கால்களால் விமானம் ஓட்டும்  முதல் பெண் விமானி 

ஜெசிகா வளர வளர அவரது அறிவும் ஆறுதலான பேச்சும்

மேலும்
img
விடுமுறை நாளில் அரசு காரில் உல்லாசம் - பிரிட்டனின் போர் தளபதி மீது நடவடிக்கை 

அரசு சொத்தினை தவறாக பயன்படுத்தியதாக கூறி

மேலும்
img
டயானா மரணம்: மௌனம் கலைந்தார் இளவரசர் வில்லியம்

இளவரசர் சார்லசை பிரிந்து வாழ்ந்த நிலையில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img