img
img

மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா
சனி 20 ஏப்ரல் 2019 16:34:39

img

கொல்கத்தா:

மேற்குவங்க மாநிலத்தில் உங்களுக்கு வெற்றி எல்லாம் கிடைக்காது, ரசகுல்லா வேணும்னா கிடைக்கும் என பாரதிய ஜனதாவினரை கிண்ட லடித்துள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள பாலுர்காட் மக்களவைத் தொகு தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய அவர் மேற்கு வங்கத்தில் தாங்கள் வெற்றி பெற்றால் லட்டு கிடைக்கும் என்று பேசிய மோடியை கிண்டல் செய்தார் மேற்குவங்க மாநிலத்தில் பெரிய எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என்றார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தன்னை டீ விற்பவராக காட்டிக் கொண்ட மோடி இப்போது தன்னை சவுகிதார் என்று கூறிக்கொள்கிறார் ஆனால் தேர்தல் முடிந்த பின் அவருடன் சவுக்கி(கட்டில்) மட்டுமே இருக்கும் என்றார், ஆந்திரா, கேரளா தமிழ்நாடு போ ன்ற மாநிலங்களில் ஒரு இடத்தை கூட பாஜக பெறாது. மொத்தம் 100 இடங்களைக் கூட பாஜக வெல்லாது. இப்போதே பல அட்டூழியங்களை செய்து வரும் பாஜக மீண்டும் வென்றால் நாம் பேசுவற்கு கூட கட்டுப்பாடு விதிப்பார்கள்.

மேற்கு வங்கத்தில் பாதிக்குப்பாதி இடங்களையாவது பிடிக்க இலக்கு வைத்துள்ளார்கள் பாரதிய ஜனதாவினர் ஆனால் அவர்களுக்கு லட்டுவுக்கு பதிலாக ரசகுல்லாதான் (பூஜ்ஜியம்) கிடைக்கும். கடந்த 2014 ம் ஆண்டு தேர்தலிலாவது 2 இடங்களை வென்றார்கள் ஆனால் இந்த தேர்தலில் ஒரு இடத்தை கூட அவர்கள் பெறப் போவதில்லை என்று மம்தா கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்

அதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது

மேலும்
img
அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு

மேலும்
img
ஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி?

ஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி

மேலும்
img
கனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி!

ஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி

மேலும்
img
ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img