புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

திமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழக்க வேண்டும்: பிரேமலதா பேச்சு
திங்கள் 15 ஏப்ரல் 2019 16:58:24

img

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேஷ் மற்றும் வடசென்னை பாராளுமன்றத் தொகுதியில் போட்டி யிடும் தேமுதிக வேட்பாளர் மோகன்ராஜ் ஆகியோரை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர், காங்கிரஸ் - திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறக் கூடாது. இதற்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் - திமுக கூட்டணி தமிழகத்தை வஞ்சித்த கூட்டணி. இந்த கூட்டணிதான் இலங்கையில் தமிழ் உறவுகள் படுகொலை ஆவதற்கு காரணம். ஆகவே தமிழக மக்கள் யாரும் காங்கிரஸ் - திமுக கூட்டணியை ஏற்றுக்கொள்ள முடியாது. 

2ஜி ஊழல் உள்பட பல ஊழல்களை செய்த கூட்டணி காங்கிரஸ் - திமுக கூட்டணி. வடசென்னையிலும், பெரம்பூரிலும் திமுக வேட்பாளர்களை டெபா சிட் இழக்க செய்ய வேண்டும். பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக கூட்டணி ராசியான கூட்டணி. 2011ல் அமைந்தது போல ராசியான கூட்டணி. இந்த ராசியான 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். இது இயற்கையான கூட்டணி. எம்.ஜி.ஆரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருப்பவர் விஜயகாந்த். 

மத்தியிலும், மாநிலத்திலும் நடப்பது நம்முடைய ஆட்சி. ஆகையால் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். 18 சட்டமன்ற தொகுதியிலும் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற தேமுதிக துணை நிற்கும். அதிமுக ஆட்சி தொடர தேமுதிக கூட்டணி தர்மத்தோடு துணை நிற்கும். இவ்வாறு பேசினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இலங்கை குண்டுவெடிப்பு.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள்,

மேலும்
img
இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..

வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்

மேலும்
img
தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்

னநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்

மேலும்
img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img