புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

சூடான் அதிபரை சிறைபிடித்தது ராணுவம் 
சனி 13 ஏப்ரல் 2019 14:12:32

img

கர்ட்டோம், 

சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்த அந்நாட்டு ராணுவம், அவரை சிறைபிடித்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது. சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.    

போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்கா ரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.   

இந்நிலையில், சூடான் நாட்டு அதிபரான ஒமர் அல்-பஷிரை பதவி நீக்கம் செய்து சிறைபிடித்துள்ளோம் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது.  இதுதொடர்பாக சூடான் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் அவாட் இப்னு கூறுகையில், அதிபர் பதவியில் இருந்து ஒமர் அல் பஷீர் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவரை சிறைபிடித்துள்ள நாங்கள் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!

ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள

மேலும்
img
ஈபள் டவர் ஒளி  அணைக்கப்பட்டு அஞ்சலி

பிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்

மேலும்
img
இலங்கை பலி விவரத்தை  தவறாக பதிவிட்ட டிரம்ப்!

500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த

மேலும்
img
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்

மேலும்
img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img