செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

அமெரிக்க உள்துறை அமைச்சர் திடீர் ராஜினாமா 
சனி 13 ஏப்ரல் 2019 13:36:45

img

வாஷிங்டன், 

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க உள்நாட்டு பாது காப்புத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் கிர்ஸ்ட்ஜென் நீல்சென். மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரம், குடும்பமாக வரும் அகதிகளை பிரிந்து தனித்தனியாக காவல் மையங்களில் அடைப்பது உள்ளிட்ட டிரம்பின் சர்ச்சைக்குரிய திட்டங்களை இவர் அமல்படுத்தி உள்ளார். 

இவர் டிரம்பின் விசுவாசியாக இருந்தபோதிலும், அகதிகள் விவகாரத்தில் போதியளவு கடுமை காட்டவில்லை என கிர்ஸ்ட்ஜென் நீல்சென் மீது டிரம்ப் அவ்வப்போது அதிருப்தி தெரிவித்து வந்தார். 

இந்த நிலையில், கிர்ஸ்ட்ஜென் நீல்சென்  திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான காரணம் எதையும் குறிப்பிடாத கிர்ஸ்ட்ஜென் நீல்சென்  பதவியை துறக்க இதுதான் சரியான தருணம் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். கிர்ஸ்ட்ஜென் நீல்சென் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட டிரம்ப், தற்காலிக உள்துறை அமைச்சராக சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு கமிஷனர் கெவின் மெக்லீயன் பொறுப்பு வகிப்பார் என கூறினார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்

ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட

மேலும்
img
ஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு

தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான

மேலும்
img
அதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி 

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்

மேலும்
img
245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது 

அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்

மேலும்
img
வர்த்தகப் போர் எதிரொலி! அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு

கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img