புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது தென்கொரிய நீதிமன்றம் தீர்ப்பு
சனி 13 ஏப்ரல் 2019 13:33:34

img

சியோல், 

தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தென்கொரியாவில் 1953ஆம் ஆண்டு முதல் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமலில் உள்ளது. கருக்கலைப்பு தடைச் சட்டத்தின்படி தடையை மீறி கருக்க லைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனையும் கருக்கலைப்பு செய்யும் டாக்டர்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. 

அதே சமயம் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதால் கரு உருவாகி இருந்தாலோ அல்லது வயிற்றில் இருக்கும் கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்ச த்திலோ மட்டும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். இந்த கருக்கலைப்பு தடைச்சட்டம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனால் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீண்டகாலமாக அங்கு போராட்டம் நடந்து வந்தது. 

இந்த நிலையில், திடீர் திருப்பமாக கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. அடுத்த ஆண்டு (2020) இறுதிக்குள் இந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும் அந்த காலக்கெடுவுக்குள் திருத்தியமை க்கப்படவில்லை என்றால் அந்தச் சட்டம் செயலற்றதாகும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கருக்கலைப்பு தடைச்சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த பெண்ணுரிமை ஆர்வலர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!

ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள

மேலும்
img
ஈபள் டவர் ஒளி  அணைக்கப்பட்டு அஞ்சலி

பிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்

மேலும்
img
இலங்கை பலி விவரத்தை  தவறாக பதிவிட்ட டிரம்ப்!

500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த

மேலும்
img
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்

மேலும்
img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img