புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

விக்கியின் நிராகரிப்பு - கம்மன்பில அதிர்ச்சி 
சனி 06 ஏப்ரல் 2019 14:56:24

img

கொழும்பு, 

மன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக, புளோரிடாவின் பீட்டா ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கையை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்திருப்பது குறித்து கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். 

சி.வி.விக்னேஸ்வரன் இத்தகைய முடிவை எடுத்திருப்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அளிக்கிறது. மன்னார் புதைகுழி விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் லாபம் தேடுகிறது.அமெரிக்க ஆய்வகத்தின் அறிக்கை தொடர்பாக அவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தரும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என  உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பில் பேசிய வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்பான மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளார். கார்பன் ஆய்வு அறிக்கையை இறுதியானதாக ஏற்றுக் கொள்ள முடியாது. மேலதிக ஆய்வுகள் நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் மீண்டும்  தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம்

மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த சதிதிட்டம்

மேலும்
img
இலங்கையில் பெரும் தாக்குதல் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு விடுமுறை

நாடு முழுக்க பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால்

மேலும்
img
வதந்திகளை நம்ப வேண்டாம்

குண்டு வெடிப்புச் சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல்

மேலும்
img
இலங்கையில் பெரும் தாக்குதல்: விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img