புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

வாக்குகளுக்காகவே புல்வாமா தாக்குதல் நடைபெற்றது- மூத்த அரசியல் தலைவர் பேச்சு
வெள்ளி 22 மார்ச் 2019 16:04:31

img

கடந்த மாதம் 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடை பெற்றது. இதற்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதில டியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெறவே புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று சமாஜ்வாதிக் கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் சர்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பாட்னா அருகே நேற்று நடந்த  பொதுக்கூட்டம் ஒன்றில் ராம்கோபல் யாதவ் பேசிய போது, "துணை ராணுவப்படையினர் மத்திய அரசின் மீது அதிருப்தி யில் இருக்கிறார்கள். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள்  கொல்லப்பட்டு இருக்கிறார்கள். துணை ராணுவப்படையினர் என்னிடம் வருத்தப்பட்டு புகார் கூறினார்கள். அனைத்து வீரர்களையும் வழக்கம் போல விமானத்தில்  அனுப்பி இருக்கலாம் என்று துணை ராணுவப்படையின் மூத்த அதிகாரிகள் என்னிடம் புகார் தெரிவித்தார்கள். ஜம்மு வரை விமானத்திலோ ஆழத்து குண்டு துளைக்காத வாக னத்திலோ சென்றிருக்கலாம். தாக்குதல் நடந்த அன்று ஜம்மு வரை எந்தவிதமான பாதுகாப்புச் சோதனையும் நடைபெறாமல் வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி வீரர்கள் அனைவரும் முதல்முறையாக சாதாரண பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஏதோ சதி நடந்திருக்கிறது. மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட உடன் இது குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். இந்த விஷயத்தில் மிகப்பெரிய தலை வர்கள் சிக்கலாம் என கருதுகிறேன்" என்று ராம்கோபால் யாதவ் தெரிவித்தார். அவரின் இந்த கருது தற்போது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இலங்கை குண்டுவெடிப்பு.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள்,

மேலும்
img
இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..

வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்

மேலும்
img
தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்

னநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்

மேலும்
img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img