புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

ஆப்கானிஸ்தானிய படைகள் தாக்குதலில்  51 பயங்கரவாதிகள் பலி 
திங்கள் 18 மார்ச் 2019 17:00:30

img

காபுல், 

ஆப்கானிஸ்தானில் படைகள் நடத்திய 24 மணி நேர தாக்குதலில் 51 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கு வதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து அந்த நாட்டின் படைகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அந்த நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாத்கிஸ் மாகாணத்தில் அவர்களை வேட்டையாடும் நடவடிக்கையில் படைகள் ஈடுபட்டன. 

இந்த நடவடிக்கையில் அங்கு 51 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதை ராணுவம் ஒரு செய்தி குறிப்பில் உறுதி செய்துள்ளது. 

ஆனால் இது பற்றி தலிபான் பயங்கரவாதிகள் தரப்பில் எந்த தகவலும் இல்லை. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்கு பகுதியின் கோட்டி சாங்கி மாவட்டத்தில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதில் 2 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் கார் டிரைவர் எனக் கூறப்படுகிறது. உரிய நேரத்துக்கு முன்னதாகவே இந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ஈராக்கில் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!

ஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள

மேலும்
img
ஈபள் டவர் ஒளி  அணைக்கப்பட்டு அஞ்சலி

பிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்

மேலும்
img
இலங்கை பலி விவரத்தை  தவறாக பதிவிட்ட டிரம்ப்!

500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த

மேலும்
img
இலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்!

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்

மேலும்
img
அமெரிக்க மாநிலங்களை  புயல் தாக்கியது - 4 பேர் பலி

மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img