img
img

மு.க. ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் - ராகுல் காந்தி பேச்சு
புதன் 13 மார்ச் 2019 18:07:35

img

நாகர்கோவில் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விரைவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக போகிறார். இங்கே அமைந்திருக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணியாகும். பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டுள்ளார்.  2019 தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழகத்தில் இன்று நடப்பது மோடி ஆட்டிவைக்கும்  கைப்பாவை ஆட்சியாகும். 

கடந்த காலத்தில் திமுக - அதிமுக போட்டியிருந்தது. இருபக்கமும் வலுவான தலைவர்கள் இருந்தனர். ஆனால், இப்போது  மத்திய அரசு தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்கிறது. மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது. இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதி ராக அரசின் ஒவ்வொரு நிறுவனங்களையும் சிதைத்து வருகிறார். ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்கிறார். மோடி எங்கு என்ன வேண்மென்றாலும் செய்யலாம், தமிழகத்தில் அது நடக்காது. தமிழக மக்கள் அடக்கி ஆழுவதை அங்கீகரிக்க மட்டார்கள்.  
 
தமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கம் உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும். பிரதமர் மோடி பொய்யைதவிர எதையும் சொல்வது கிடையாது. ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும் என கூறினார். 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றார். எதையும் நிறைவேற்றவில்லை. இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை உள்ளது. தமிழக விவசாயிகள் போராடு கிறார்கள். டெல்லியில் போராடிய விவசாயிகளை நேரடியாக பார்த்தேன். அவர்களுடைய வலி தெரியும், உண்மையான நிலையை பார்த்து வருத்தம் அடைந்தேன். 
 
எங்களுடைய வாக்குறுதிபடி ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மோடியோ, அவருடைய தொழில் நண்பர்களுக்காவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் பணியாற்றுகிறார். இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்றுவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும். பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறாது. 
 
ஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றும், இளைஞர்கள் வேலையின்றும் கஷ்டங்களை அனு பவித்து வருகிறார். உண்மை வெல்லும் போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார் என்று பேசினார். தொடர்ந்து பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் விமர்சனம் செய்து பேசி வருகிறார். 
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மக்களுக்கு சேவை செய்வது எல்லாம் வீண்... படுதோல்வியால் குமுறும் அமமுகவினர்

அதிமுக மற்றும பாஜக ஜெயிக்க கூடாது

மேலும்
img
அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

பாமகவின் வாக்கு வங்கி அதிமுகவிற்கு

மேலும்
img
ஆட்சி அமைக்க பா.ஜ.க. உரிமை கோரினால் அதனை தடுப்பது எப்படி?

ஏதோ ஒரு அதிர்ச்சி எதிர்க்கட்சிகளுக்கு கொடுக்கவிருக்கிறார் மோடி

மேலும்
img
கனிமொழிக்கு அமைச்சர் பதவி உறுதி!

ஒரு வேளை பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி

மேலும்
img
ஆட்சி பறிபோகும் நிலை! சசிகலாவை சந்தித்த எடப்பாடி தரப்பு!

எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவிடம் சமாதானம் பேச

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img