ஞாயிறு 24, மார்ச் 2019  
img
img

அமெரிக்கவில் ராணுவ அதிகாரி மீது  பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பாலியல் குற்றச்சாட்டு!
சனி 09 மார்ச் 2019 13:03:58

img

வாஷிங்டன், 

அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியபோது ராணுவ அதிகாரி ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டதாக நாடாளுமன்ற செனட் சபை உறுப்பினர் மார்தா மெக்சலி கூறினார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் சபை  உறுப்பினராக இருப்பவர் மார்தா மெக்சலி. இவர் அரி சோனா மாநிலத்தில் இருந்து 2ஆவது முறை குடியரசு செனட் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கெனவே அமெரிக்க விமானப்படையில் பணியாற்றியவர். 18 வயதில் விமானப்படையில் சேர்ந்த அவர் 26 ஆண்டுகள் பணியாற்றினார். இறுதி யாக கலோனல் அதிகாரியாக இருந்தார்.2010-ல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு அரசியலில் குதித்த அவர் செனட் உறுப்பினராக இருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஏற்கெனவே புகார்கள் இருந்தன.

இதில் தனக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக மார்தா மெக்சலி கூறினார். விமானப்படையில் இருந்த போது தனக்கு மேல் உள்ள அதிகாரி ஒருவர் தன்னிடம் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொண்டதாக அவர் தெரிவித்தார்.அந்த நேரத்தில் புகார் தெரிவித்தால் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நான் புகார் தெரிவிக்காமல் மௌனம் காத்தேன் என்று அவர் கூறினார்.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணைய  தளத்தில் விற்பனை: தென்கொரியாவில் 4 பேர் கைது 

தென்கொரியாவில் 1,600 பெண்களை ஆபாசமாக

மேலும்
img
யூடியூப் சேனலுக்காக குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை - வளர்ப்பு தாய் கைது 

உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள்

மேலும்
img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img