திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

காமராஜர் ஆட்சியை கொடுப்போம்.. திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த மோடி!
திங்கள் 11 பிப்ரவரி 2019 13:21:03

img

திருப்பூர்:

என்னுடைய பாஜக அரசு காமராஜர் கனவு கண்ட ஆட்சியை இந்தியாவில் வழங்கும் என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக்கிறார்.இன்று பிரதமர் மோடி தமிழகம் வந்தார். திருப்பூரில் நடந்த பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்க விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.அதன்பின் திருப்பூரில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். இதில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு பல வாக்குறுதிகளை அவர் முன்வைத்தார்.

நம் நாட்டின் முன்னேற்றத்தை உலகமே பார்த்துக் கொண்டு இருக்கிறது.இந்த நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வரி செலுத்திக் கொண்டு இருக்கி றார்கள். அதனால்தான் நாட்டின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.பல நாள் கோரிக்கையான வருமான வரிவிலக்கு கோரிக்கை மக்களுக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது

ரூ 5 லட்சம் வருட வருமானம் இருந்தால் யாருக்கும் வருமான வரி கிடையாது.மக்கள் காங்கிரஸ் கட்சியினரை புறக்கணித்தார்கள். காங்கிரஸ் கட்சி யினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவார்கள்.காங்கிரஸ் தன்னை ஆளப்பிறந்த கட்சியாக நினைத்துக் கொண்டு இருந்தது .

தற்போது காங்கிரஸ் ஆளும் காலம் முடிந்துவிட்டது. காங்கிரஸிடம் என்ன கேட்டாலும் அவர்களிடம் மோடி என்ற வார்த்தைதான் இருக்கும்.விவசாயம் குறித்து கேட்டால் மோடி என்பார்கள்.தொழிற்சாலை குறித்து கேட்டால் மோடி என்பார்கள். மோடியை வசைபாடுவதே அவர்களின் அரசியல் இருக்கிறது. காமராஜர் ஆட்சியை மக்களுக்கு பாஜக கொடுக்கும்.

நீங்கள் டெல்லியில் ஒரு ஆட்சியை அமர்த்தி உள்ளீர்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை.இது போன்ற நல்ல ஆட்சியைத்தான் காமராஜர் விரும்பி னார். முன்பு ஒரு குடும்பம்தான் ஆட்சி நடத்தி வந்தது.தற்போது மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. மோடி ஒன்றும் செய்யவில்லை என்று அவர்கள் கூறுகி றார்கள், ஆனால் அனைத்தையும் செய்தது நாங்கள்தான், என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img