திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

உண்ணாவிரத போராட்டத்தில் ராகுல் பங்கேற்பு!
திங்கள் 11 பிப்ரவரி 2019 13:14:25

img

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி அளவில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். 

அப்போது பேசிய சந்திரபாபு,  “மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்த இன்று நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். ஆனால், நேற்று பிரதமர் ஆந்திராவின் குண்டூருக்கு வந்திருந்தார். அதற்கு என்ன தேவை இருக்கிறது. நீங்கள் எங்கள் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அதை எப்படி நிறைவேற்றி கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். இது ஆந்திர மக்களின் சுய மரியாதை. எங்களுடைய சுய மரியாதையை தாக்கினால், அதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. இந்த மத்திய அரசை எச்சரிக்கிறோம், குறிப்பாக பிரதமர் தனிப்பிட்ட ஒருவர் மீது தாக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

இந்நிலையில் இந்த உண்ணாவிரத  போராட்டத்தில் ராகுல்காந்தியும் பங்கேற்பு. பரூக் அப்துல்லா உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img