திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

மின் சிகரெட் வெடித்து ஆடவர் பலி 
சனி 09 பிப்ரவரி 2019 15:19:48

img

வாஷிங்டன்,

அமெரிக்காவில் மின் (எலக்ட்ரானிக்) சிகரெட் வெடித்து சிதறியதில் ஆடவர்  உயிரிழந்தார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் பிரவுன் (வயது 24). இவர் போர்ட் வொர்த் நகரில் உள்ள மின் சிகரெட் கடைக்கு சென்றார். அங்கு மின் சிகரெட்டை வாங்கிய அவர் கடைக்கு வெளியே தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக மின் சிகரெட் வெடித்து சிதறியது. இதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கடை உரிமையாளர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இறந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மின் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் மின் சிகரெட் வெடித்து நிகழ்ந்த 2ஆவது மரணம் இதுவாகும். கடந்த ஆண்டு மே மாதம் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 38 வயது ஆடவர் சிகரெட் வெடித்து பலியானது குறிப்பி டத்தக்கது. 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img