வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

ஓபிஎஸ் பட்ஜெட் மீது ஸ்டாலின் விமர்சனம்..!
வெள்ளி 08 பிப்ரவரி 2019 18:28:15

img

சென்னை:

இன்று பிப்ரவரி 08, 2019, வெள்ளிக்கிழமை தமிழ சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட், சாதாரண மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராத உதவாக்கரை பட்ஜெட் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஏதோ சங்கீத வித்துவான், பல்லவியை திரும்பத் திரும்ப பாடுவது போல, தங்கள் கடிட்சியைப் பற்ரி திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லி கொண்டி ருந்தார். ஏழை எளிய மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத இந்த 2019 - 20 மாநில பட்ஜெட் சுமார் 150 நிமிடங்கள் பாடினார். வரும் வருவாயை சீராக்கி, நிர்வகித்து திட்டமிட்டு மக்கள் நலத் திட்டங்களை, எதிர்கால தமிழகத்தை கட்டமைக்கும் திட்டங்களுக்காக செலவு செய்ய வேண்டியது தான் தமிழக அரசின் கடமையாக இருந்தது. ஆனால் இப்போது அதிமுக அரசு கை நீட்டிய வாங்கிய கடனுக்கு சரியாக வட்டிப் பணத்தைச் செலுத்து வதைத் தான் இந்த 2019 - 20 பட்ஜெட் தெளிவாக காட்டுகிறது.

தமிழக அரசு ஊழியர்கள், தமிழ பள்ளிக் கூடங்களில் பணி புரியும் ஆசிரியர்கள், தொடர்ந்து வீதிக்கு வந்து போராடும் சூழ்நிலை உருவானது. தங்கள் உரி மையைக் கேட்ட போராட்டக் காரர்கள் மீது ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆளும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளாக பணீடைநீக்கம் எல்லாம் செய்து போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர். அரசு ஊழியர் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் இரண்டு அரசுக் குழுக்கள் அமைத்தது.

அந்த குழு ஆய்வு செய்து அறிக்கையும் சமர்பித்துவிட்டது. அந்த குழு சொல்லி இருக்கும் பரிந்துரைகளை எப்படி நிறைவேற்ற இருக்கிறார்கள், அதற்கான களத் திட்டங்கள் என்ன என்பதை பட்ஜெட்டில் தெரிவிக்காதது, ஏமாற்றமளிப்பதாகச் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். அதோடு தமிழகத்தில் கூடுதலாக வேலைவாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சிகள் குறித்த எந்த திட்டங்களோ, அறிவிப்புகளோ இந்த பட்ஜெட்டில் இல்லை.

 

 
ஓபிஎஸ் பட்ஜெட்  மீது ஸ்டாலின் விமர்சனம்..!

 

பட்ஜெட்டில் விவசாயிகள் பற்றி ஒரு அறிவிப்பு கூட இல்லை. நெல் கொள்முதலுக்கு இன்னும் குறைந்த விலையே இருக்கிறது. தமிழகத்தில் கரும்பின் ஆதார விலையை இன்னும் உயர்த்தவில்லை. ஒட்டு மொத்தத்தில் பட்ஜெட், திவாலான நிறுவனம் போல் உள்ளது. அதிமுகவில் கொடநாட்டில் எப்படிக் கூட்டாக கொள்ளை அடித்தார்களோ..? அதே போல இப்போது தமிழக அரசு இயந்திரத்தில் வாகாக கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது என ஸ்டாலின் வறுத்தெடுத்திருக்கிறா

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
img
எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது, இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்

வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து

மேலும்
img
10 சதவீத ஓட்டுகள் பெறுவோம் - கமல்ஹாசன்

நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட

மேலும்
img
பாஜக தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொலை

அந்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img