திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

எல்லோரும் தனியா நில்லுங்க.. நாங்களும் வர்றோம்.. மோதிப் பார்ப்போம்
செவ்வாய் 29 ஜனவரி 2019 12:04:19

img

நாகர்கோவில்:

தேர்தலில் கூட்டணி இல்லாமல் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்குமானால் பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் உடனான கலந்தாய்வு கூட்டம் மத்திய இணை அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் தலைமையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் ஏராளமான ஓட்டுநர்கள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் கலந்துரையாடினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், குறைந்த செலவில் நிறைவான வாழ்க்கையை சாதாரண மக்கள் எப்படி பெறமுடியும் என்கின்ற திட்டம் மத்திய அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் திட்டம் போன்ற திட்டங்களை அறிவிப்பதன் மூலம் வேறு ஏதோ குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் உள்ளது. மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப மாட்டார்கள் இந்த திட்டம் என்பது ஒவ்வொரு கால கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி சொல்லும் ஏமாற்று வேலை இது காங்கிரஸ் கட்சியின் தில்லுமுல்லு அரசியல் - இந்த திட்டம் தேர்தலுக்கு கூட பயன்படாது.

தேர்தலில் கூட்டணி இல்லாமல் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்குமானால் பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்கும். இந்த தேர்தலில் எப்படிப்பட்ட கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக தெளிவான முடிவில் இருக்கிறோம். சந்திரபாபு நாயுடு நாடாளுமன்ற தேர்த லில் தனித்து போட்டி என கூறுவது குறித்த கருத்திற்கு - சந்திர பாபு நாயுடு மாநில அனாதை காங்கிரஸ் தேசிய அனாதை.

ஜாக்டோ ஜியோ விவ காரத்தில் மாநில அரசு அதிக கவனம் கொடுத்து வருகிறது. மேலும் கவனம் கொடுப்பார்கள் என நம்புகிறேன் போராட்டம் முடிந்து விட கூடாது என சிலர் நினைக்கிறார்கள். அது தவறு ஆசிரியர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இதை அரசியல் ஆக்க வேண்டாம் என்றார் அவர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img