திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

அமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டு கொன்ற இளைஞர் 
செவ்வாய் 29 ஜனவரி 2019 11:57:29

img

ஹூஸ்டன், 

அமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டு கொன்று தப்பிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் தென்கிழக்கே லூசியானாவில் கொன்சாலெஸ் நகரில் வசித்து வந்தவர்கள் எலிசபெத் தேரியட் மற்றும் கெய்த் தேரியட்.  51 வயது நிறைந்த இந்த தம்பதியரின் மகன் டகோட்டா தேரியட் (வயது 21). டகோட்டா தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுள்ளான்.  இதில் அவர்கள் படுகாயமடைந்து உள்ளனர்.  இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அவர்களை சுட்டது டகோட்டா என போலீசாரின் விசார ணையில் தெரிய வந்தது. 

இந்நிலையில் டகோட்டாவின் பெற்றோர் உயிரிழந்து விட்டனர்.  இதேபோன்று அருகே உள்ள மற்றொரு பகுதியில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரி ழந்தனர்.  அவர்கள் பில்லி எர்னெஸ்ட் (வயது 43), டேனர் எர்னெஸ்ட் (வயது 17) மற்றும் சம்மர் எர்னெஸ்ட் (வயது 20) என தெரிய வந்துள்ளது. இவர்க ளில் ஒருவர் டகோட்டாவின் காதலி என கூறப்படுகிறது. 

இந்த கொலைகளை செய்து விட்டு டகோட்டா மிஸ்ஸிசிப்பி நகருக்கு தப்பி சென்று உள்ளான் என கூறப்படுகிறது.  தொடர்ந்து போலீசார் டகோட்டாவை தேடி வருகின்றனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img