புதன் 23, ஆகஸ்ட் 2017  
img
img

இலங்கையில் சிறுபான்மை இனத்தவருக்கு தகுந்த இடமில்லை
வெள்ளி 21 அக்டோபர் 2016 13:51:54

img

இலங்கையில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு தேசிய ரீதியில் தகுந்த இடம் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதாக ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ரீட்டா ஐசெக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது இதனை கூறியுள்ளார்.வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தை அதிகளவில் வைத்திருப்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரீட்டா குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர இலங்கையில் தோட்ட தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும் மார்ச் மாதம் நடைபெறும் 34 வது ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அறிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
நாங்கள் கூலியாட்கள் கிடையாது! அரசை கடுமையாக சாடிய விஜயகலா

நாங்கள் இதிலிருந்து விலகிக்கொள்கின்றோம்

மேலும்
img
ஜெர்மன் வாழ் ஈழத்தமிழ் பெண்ணின் சாதனைக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்த்து

தனது இசையை பகிர்ந்து கொண்டதற்கும் பேஸ்புக் வழி நன்றி

மேலும்
img
எனது உதவியின்றி புதிய அரசாங்கம் ஒருபோதும் அமையாது

மைத்திரி அறிவிப்பு

மேலும்
img
பொலிஸ் அதிகாரிகள் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு!

தாக்குதலில் படுகாயமடைந்த இரு போலீஸ் அதிகாரிகளும்

மேலும்
img
பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கம்

இலங்கை அரசு அதிர்ச்சி

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img