திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

ஹோட்டலில் உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள் 
செவ்வாய் 29 ஜனவரி 2019 11:54:58

img

புடாபெஸ்ட், 

ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் உள்ள ஹோட்டலில் வாடிக்கையாளர்களுக்கு ரோபோக்கள் உணவு சப்ளை செய்து வருகிறது.  ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஹோட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ரோ போக்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. 

அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவு வகைகளை பரிமாறுகிறது. வேண்டிய பானங்கள் மற்றும் தண்ணீரை சப்ளை செய்கிறது. ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்களுடன் உரையாடுகிறது. குழந்தைகள் மற்றும் பெரிய வர்களுடன் நடனம் ஆடி மகிழ்விக்கிறது. 

இதனால் ஹோட்டலுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  ரோபோக்களின் சேவை தொடருமானால் மக்களுக்கான வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளது. அதற்கு பதில் அளித்த ஹோட்டல் நிர்வாகம் பணி புரியும்  ரோபோக்களை இயக்க தொழில் நுட்ப நிபுணர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தனர். 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img