திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

மதுரையில் மோடி.. வந்தார்.. பேசினார்.. போனார்
திங்கள் 28 ஜனவரி 2019 16:58:34

img
சென்னை:
 
வந்தார்.. போனார்... வேற ஒன்னுமே இல்லை.. இதுதான் பிரதமர் மோடியின் மதுரை வருகையின் முக்கிய சாராம்சம் என்றுதான் சொல்ல தோன்று கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்லை நாட்டி, சில விஷயங்களையும் மோடி பேசினார். தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படும் என்று சொன்னதைகூட அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான ஒரு விஷயமாக எடுத்து கொண்டாலும் மற்ற பேச்சுக்கள் எல்லாம் எதுவும் மனசில் ஒட்டவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 47 லட்சம் கழிவறைகள் கட்டி தந்துள்ளது என்று மோடி சொல்லிதான் நமக்கே தெரியவருகிறது. இத்தனை கழிவறைகள் நமக்கே தெரியாமல் எங்கு உள்ளன, எப்போது கட்டி முடிக்கப்பட்டன தூய்மை இந்தியா சாதனையை சொல்வதற்காக இந்த புள்ளி விவரத்தை பிரதமர் சொன்னாரா என்று தெரியவில்லை.
 
அடுத்தது "பாஜக அரசு மீது ஊழல் புகார் இல்லை. நாட்டை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். எங்கிருந்தாலும் அவர்களை கொண்டுவந்து நீதியின் முன்னர் நிறுத்தியே தீருவோம்" என்றார். அம்பானி சகோதரர்கள், நீரவ் மோடி, விஜய் மல்லையாவைதான் மோடி சொல்கிறாரா என்றுகூட நம்மால் எடுத்து கொள்ள முடியாது.
 
மேலும் தமிழகத்தில் கூட்டணி வைக்க போவதாக சொல்லப்படும் கட்சிகளுக்கும் பிரதமரின் இந்த வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தப்படுத்தவும் முடி யாது. அதனால் "ஊழல் புரிந்தவர்களை விடவே மாட்டோம்" என்று சொன்னது யார் என்று தெளியவில்லை. எதுவானாலும், மே மாதத்திற்கு பிறகு ரபேல் விமான தயாரிப்பு ஊழல் சம்பந்தமான நடவடிக்கைகளில் பிரதமர் ஊழல் பேச்சின் அர்த்தம் தெளிவாக வெளிப்படும் என்று வேண்டுமானால் எதிர்பார்க்கலாம்.
 
அடுத்ததாக "10 சதவீத இட ஒதுக்கீட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறை யில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது" என்று சொல்லி இருக்கிறார். மத்திய பிரதேச தேர்தலில் 5 லட்சத்துக்கும் மேல நோட்டு வாக்கு விழ காரணமே உயர்ஜாதியினர் என தெரிந்தும், அவர்களது நன்மதிப்பைப் பெறுவதற்காக 10 சதவீத இடஒதுக்கீட்டை நல்ல பெயரை சம்பாதித்து பாஜக முயன்றது என்பது நம்ம மதுரைக்காரங்களுக்கு தெரியாமலா இருக்கும்.
 
இன்னொரு விஷயம், இந்த எய்ம்ஸ் மருத்துவமனையால் சாமான்ய மக்களும் உயர்தர சிகிச்சை பெறலாம் என்று சொல்லி உள்ளார். இது தெரிந்தும்தான் நான்கரை வருடம் கழித்து அடிக்கல் நாட்ட வந்தாரா என்பது ஒரு புறம் இருந்தாலும், தமிழ்நாட்டில் 60 களிலேயே இலவச மருத்துவம் என்பது புழக்க த்தில் உள்ள ஒன்று. இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டால் எத்தனை வடநாட்டுக்காரர்கள் அதாவது ஹிந்தி மொழி பேசும் டாக்டர்கள், ஊழியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்பது நம் மாநில மக்களுக்கு இப்போதே கவலையை தந்துவிட்டது.
 
மொத்தத்தில் எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட், கஜா நிவாரண பாதிப்பு என இப்படிப்பட்ட விஷயங்கள் எதுவுமே தமிழகத்தில் நடக்கவே நடக்காத மாதிரி, வேற விஷயங்களை மட்டும் பேசி உள்ளதால், மோடியின் இந்த மதுரை வருகை ஒன்னும் சொல்லிக் கொள்கிற மாதிரியும் இல்லை, நினைச்சு பெருமைபட மாதிரியும் எதுவும் நடக்கவில்லை.
பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img