திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

வேகமாக பரவி வரும் லசா காய்ச்சலக்கு 16 பேர் பலி 
வியாழன் 24 ஜனவரி 2019 13:57:49

img

லாகோஸ்,

நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல்  கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கி 171 பேரைக் கொன்றது. இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகிறது. 

நைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது  26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 60 பேருக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நைஜீரியாவின் 36 மாநிலங்களில் உள்ள ஏழு இடங்களிலும் அபுஜாவின் தலைநகரத்திலும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான  நடவடிக்கைகள் நைஜீரிய சுகாதார அதிகாரிகள்  உலக சுகாதார அமைப்பு, நோய் கட்டுப்பாட்டுக்கான அமெரிக்க மையங்களுடன் இணைந்து மேற்கொள்கின்றனர். இந்நோய் 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. 

இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும் இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்நோய் பரவுவதை தடுக்க சுகாதாரத்துடனும் எலிகளின் தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img