திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

அளவுக்கு அதிகமாக டுரியான் உண்டவர் இரத்த நாளங்கள் வெடித்து மரணம் 
வியாழன் 24 ஜனவரி 2019 13:56:42

img

ஜாகர்த்தா, 

இங்கு தங்கேராங் பகுதியில் உள்ள சுரூக் என்ற இடத்தில் பொது மினி வேன் ஓட்டுநர் ஒருவர் இறந்து  கிடந்தார். அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டதால் அவர் இறந்திருக்கக்கூடும் என்று அப்பகுதி போலீஸ் துறை கூறியுள்ளது. மரணமடைந்த எடி (வயது 53) என்ற அந்த மினி வேன் ஓட்டுநர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் அளவுக்கு அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டுள்ளார் என்று தென் தங்கேராங் போலீஸ் குற்றவியல் விசாரணை பிரிவு தலைவர் அலெக்ஸாண்டர் யுரிகோ கூறினார். 

இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த எடி, அதிகமான டுரியான் பழங்களை உட்கொண்டதால், அவருக்கு இரத்த அழுத்தம் ஏற்பட்டு, அவரின் இரத்த நாளங்கள் வெடித்துள்ளன. இதையடுத்து அவருக்கு மூக்கிலிருந்து இரத்தம் வெளியாகி இறந்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். மரணமடைந்த எடியின் உடலை அவரின் நண்பர்கள், அவரது மினி வேனில் கண்டுபிடித்தனர். விசாரணையின் மூலம் அவரின் மரணப் பின்னணியில் எத்தகைய சந்தேகமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. அவர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப் பட்டிருந்தார் என்ற விவரத்தை, அவரின் குடும்பத்தார், நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர் என்று அலெக்ஸாண்டர் தெரிவித்தார். 

எடியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த அவரின் குடும்பத்தார் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக டுரியான் பழங்களை உட்கொண்டால், இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்று இந்தோனேசிய பல்கலைக்கழகத்தின் ஊட்டச் சத்து நிபுணர் மர்யா ஹர்யோனோ கூறினார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img