திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

அமெரிக்காவில் விமான விபத்து 
வியாழன் 24 ஜனவரி 2019 13:53:09

img

வாஷிங்டன், 

அமெரிக்காவின் ஒகியோ மாநிலத்தில் சிறு ரக விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் ஒகியோ மாநிலம் வாய்னே கவுண்டியில் மிகப் பழமையான சிறிய விமானம்  புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியது. கிளப்லேண்டில் இருந்து 60 கி.மீ. தெற்கில் விமானம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி பாய்ந்தது.  

மரங்களிலும் மின்கம்பங்களிலும் மோதி, பின்னர் ஒரு வீட்டின் முன்னால் அது விழுந்து நொறுங்கியது. நேற்று காலை இந்த விபத்து ஏற்பட்டது. இதில், விமானத்தில் இருந்த 2 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் இருவரும் ஆப்பிள் கிரீக் பகுதியைச் சேர்ந்தவர்கள். என்ஜின் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. விமானம் விழுந்தபோது அருகில் இருந்த வீடு கடுமையாக குலுங்கி உள்ளது. ஆனால், வீட்டில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img