திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

பாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு.
செவ்வாய் 22 ஜனவரி 2019 18:40:13

img

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பேரணியின் போது மாயாவதி குறித்து அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு 50 லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம் எல் ஏ விஜய் யாதவ் தெரி வித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்துகொண்ட சாதனா சிங், 'மாயாவதிக்கு சுய மரியாதையே கிடையாது. பெண் இனத்துக்கே அவர் ஒரு கறை.

அவர் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. மூன்றாம் பாலினத்தவர் போல உள்ளார் என கூறி திரவுபதியுடன் ஒப்பிட்டு பேசினார். இது அம்மாநில அரசிய லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சாதனா சிங் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டு அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மாயாவதியின் கட்சியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ விஜய் யாதவ் சாதனா சிங்கின் தலையை கொண்டுவருபவருக்கு 50 லட்சம் தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img