வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

பிலிப்பைன்சில் நிலச்சரிவு - பலி 85 ஆக அதிகரிப்பு 
வியாழன் 03 ஜனவரி 2019 12:54:26

img

மணிலா, ஜன. 3-

பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்சில் ஆண்டுதோறும் 20 புயல்கள் உருவாகின்றன. இதனால் பெய்துவரும் கனமழையில் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்நிலையில் அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல், கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன. 

கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மழை, வெள்ளத்தைத் தொடர்ந்து அனேக இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அனேக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முடங்கியது. 

நிலச்சரிவு, கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாயமான 26 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
வைரம் பதிக்கப்பட்ட  மாடல் அழகியின் உதட்டுக்கு கின்னஸ் சாதனை

இந்த நிறுவனம் வைர நகைகளை

மேலும்
img
அவசர நிலை பிரகடனம் செய்வேன்-அதிபர் டிரம்ப் மிரட்டல் 

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள்

மேலும்
img
சூரிய மண்டலத்துக்கு வெளியே புதிய கிரகம் 

இந்த செயற்கைகோள் சமீபத்தில் சூரிய மண்டலத்துக்கு

மேலும்
img
குரங்குக்கு பாலியல் தொல்லை இளம்பெண்ணுக்கு 3 ஆண்டு சிறை 

பஸ்மாவிற்குத் தெரியாமல் செல்போனில் வீடியோவாக

மேலும்
img
மொத்த மனித இனத்தையும் சிலந்திகள் தின்று தீர்க்கும் 

சிலந்திகள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img