செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

`அ.தி.மு.க எம்.பி-க்கள் பா.ஜ.க-வுக்கு நல்லா சேவகம் செய்றீங்க!’
புதன் 02 ஜனவரி 2019 15:40:30

img

மக்களவையில் ரஃபேல் ஒப்பந்தம் பற்றிய விவாதத்தில் ராகுல் காந்தியைப் பேசவிடாமல் அ.தி.மு.க எம்.பி-க்கள் கூச்சல் எழுப்பியுள்ளனர். 

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்ய செப்டம்பர் மாதம், 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையைப் பா.ஜ.க அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்தது என்றும் சர்ச்சை எழுந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்றுவரை குற்றம் சாட்டிவருகின்றன. 

 

இதனால் சீற்றமடைந்த ராகுல்காந்தி, ``என்னை விவாதிக்கவிடாமல் அ.தி.மு.க எம்.பி-க்கள் கூச்சல் எழுப்புகின்றனர். ஏன் இப்படிச் செய்கிறீர்கள், பிரத மர் மோடியைக் காப்பாற்ற நினைக்கிறீர்களா’’ என்று கேள்வியெழுப்பினார். ஆனால், அ.தி.மு.க எம்.பி-க்கள் தொடர்ந்து கூச்சல் எழுப்பிக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த ராகுல் காந்தி,  ``இன்று ரஃபேல் ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்க உள்ளேன். தமிழ்நாட்டைப் பிரதி நிதித்துவப்படுத்தும் அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்னைப் பேசவிடாமல் தடுக்கின்ற னர். ஆனால், நான் தொடர்ந்து பேசுவேன். நேற்று பிரதமர் மோடியின் நேர் காணலைப் பார்த்தேன். ரஃபேல் ஒப்பந்தம் பற்றி யாருமே கேள்வியெழுப்ப வில்லை என்று மோடி குறிப்பிட்டார். இது பொய். ஒட்டுமொத்த தேசமும் ரஃபேல் ஒப்பந்தம் பற்றி கேள்வியெழுப்பியுள்ளனர்.

ஒரு ரஃபேல் விமானம்கூட இதுவரை இந்தியாவுக்கு வராதது ஏன்? 126 விமானங்களுக்குப் பதில் 36 ஆக பிரதமர் குறைத்தது ஏன்; ரூ.526 கோடியாக இருந்த ரஃபேல் போர் விமானத்தின் விலையை ரூ.1,600 கோடியாக அதிகரித்தது ஏன்?” என  அடுக்கடுக்காக ராகுல் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர் `ரஃபேல் ஒப்பந்தம் பற்றி விளக்கம் கொடுக்கவும் என் கேள்விகளை எதிர்கொள்ளவும் மோடிக்கு தைரியம் இல்லை. அ.தி.மு.க எம்பிகளுக்கு பின்னால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒளிந்து கொண்டிருக்கிறார். மோடி தன் அறையில் ஒளிந்து கொண்டிருக்கிறார்’ என்றார் காட்டமாக.  இதனிடையே ராகுலை பேசவிடாமல் அ.தி.மு.க எம்.பி-க்கள் கூச்சல் எழுப்பிக்கொண்டே இருந்தனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
முதல்வரின் பிரச்சாரங்களில் குறைவாக கூடும் கூட்டம்!

மக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கூட்டத்தில்

மேலும்
img
சினிமா பாணி பேச்சு.. கொஞ்சம் காமெடி.. டெக்னாலஜியை வைத்து கலக்கும் கமல்!

இது எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா

மேலும்
img
பாஜகவை தோற்கடிக்கும் அதிமுக... உற்சாகத்தில் கனிமொழி...!

ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை

மேலும்
img
காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும்- பாஜக மூத்த எம்.பி கருத்து

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர்

மேலும்
img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img