வியாழன் 20, ஜூன் 2019  
img
img

தாங்கி பிடிக்கும் பாஜகவுக்கே இந்த சோகம்னா.. அதிமுக அரசுக்கு எப்படி இருக்கும்!
செவ்வாய் 11 டிசம்பர் 2018 18:12:59

img

சென்னை:

பாஜக எவ்வளவு சோகத்தில் இருக்கிறதோ தெரியாது. ஆனால் அதிமுக தரப்பில் நிச்சயம் உள்ளூர ஒரு கிலி உண்டாகியிருக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் போய் விட்டது என்பது ஒட்டுமொத்த கட்சிகள், மக்களின் கருத்து. அதை அதிமுக வலிமையாக மறுத்ததே இல்லை. பல அமைச்சர்கள் பாஜகவுக்கு ஆதரவாக பகிரங்கமாக பேசியும் வருகின்றனர்.

அப்படி தங்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ள பாஜகவே ஆட்டம் கண்டிருப்பதுதான் அதிமுக தரப்பையும் சேர்த்து அதிர வைத்துள்ளது. ஜெயலலிதா மறைந்ததில் இருந்தே கைதூக்கி அரவணைத்தும், அவ்வப்போது தலையில் குட்டியும் வைத்து கொண்டிருப்பது மத்திய பாஜகதான். ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று அதிமுக எதிர்பார்க்கவில்லை. அந்த பக்கம் சந்திரபாபு நாயுடு சிரித்து மகிழ்கிறார். இந்த பக்கம் பினராயி விஜயன் பூரிப்பில் உள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ என்ன மாதிரியான உணர்வில் இருக்கிறார் என்று தெரியவில்லை.

இதில் 2 விஷயங்கள் உள்ளன. ஒன்று, எப்போதோ கவிழக்கூடிய ஒரு ஆட்சியை இன்றைக்கும் வரைக்கும் இழுத்து கொண்டு போய் கொண்டிருப்பது மத்திய பாஜகதான். ஆனால் இதெல்லாம் ஒன்றும் லாப நோக்கம் இல்லாமல் மோடி செய்யவில்லை. தமிழகத்தின் இயற்கை வளங்களுக்கு வழி விடப்பட்டுள்ளது. மற்றொரு புறம் ஊழல் புகார் அமைச்சர்களின் குடுமிப்பிடியும் மோடியிடம் உள்ளது.

இன்னொரு காரணம், ஒரு மாநிலம், 2 மாநிலம் என்றால் பரவாயில்லை. ஒரேயடியாக 5 மாநிலங்களிலும் பாஜக இப்படி குப்புற விழுந்துவிட்டதால், காங்கிரசின் பலம் கூடியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ்-திமுக கூட்டணி பலமாக உள்ளது, வலுவாக உள்ளது என்று டெல்லி முதல் தமிழகம் வரை எல்லோரும் சொல்லி விட்டார்கள்.

போதாக்குறைக்கு ஸ்டாலின் ஒரு பக்கம் சந்திரபாபு நாயுடு, ராகுலை சந்தித்து கலக்கி வருகிறார். வரப்போகும் தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு வந்தால் என்னாகும்? மத்தியிலும் ராகுலும், மாநிலத்தில் ஸ்டாலினும் வந்துவிட நிறைய வாய்ப்புள்ளது. எனவே இந்த 5 மாநில தேர்தல் பாஜகவுக்கு எவ்வளவு அடியை, வலியை, இழப்பை தருகிறதோ அதே அளவுக்குத்தான் அதிமுக அரசுக்கும் தந்துள்ளது. 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img