செவ்வாய் 26, மார்ச் 2019  
img
img

ராகுலுக்கு அலை அடிப்பதற்கு வாய்ப்பே இல்லை: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
செவ்வாய் 11 டிசம்பர் 2018 17:55:15

img

ராகுலுக்கு அலை அடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார். ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், 

ராகுல் அலை வேலை செய்திருந்தால் மத்தியப்பிரதேசத்தில் 20, 30 தொகுதிகளுடன் நின்றிருக்க வேண்டும். ராஜஸ்தானில் 30, 40 தொகுதிகளுடன் நின்றிருக்க வேண்டும். ராகுல் அலை வேலை செய்கிறது என்றால் நாங்கள் இவ்வளவு பக்கத்தில் வர முடியாது. ராகுல் அலை வேலை செய்யவில்லை. ராகுல் அலை மிசோரத்தில் வேலை செய்யவில்லையா. ராகுல் அலை தெலுங்கானாவில் வேலை செய்யவில்லையா. ராகுல் அலை என்றால் எல்லா இடத்திலேயும் வேலை செய்ய வேண்டும். ராகுலுக்கு அலை அடிப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ராகுலுக்கு அலை இல்லை என்பதை அந்த கூட்டணிக் கட்சிகளே ஒப்புக்கொள்கிறார்கள். அந்தக் கூட்டணியில் உள்ளவர்களே உங்கள் பிரதமர் வேட்பாளர் யார் என்றால் பெயரை சொல்ல மறுக்கிறார்கள். ராகுலை தவிர்த்து வேறு யாரையாவது பிரதமர் வேட்பாளர் என்று சொன்னால் கூட்டணி கலைந்து விடும். 

எங்களின் உறுதியான நிலைப்பாடு 2019ல் நரேந்திர மோடியின் தலைமையில் மறுபடியும் ஆட்சியை அமைப்போம். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் இதற்கு முன்பு எவ்வளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றோமோ, அதே அளவு பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றதோடு அல்லாமல் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திராவிலும் இடங்களை பிடிப்போம். இவ்வாறு கூறினார். 

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
முதல்வரின் பிரச்சாரங்களில் குறைவாக கூடும் கூட்டம்!

மக்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த கூட்டத்தில்

மேலும்
img
சினிமா பாணி பேச்சு.. கொஞ்சம் காமெடி.. டெக்னாலஜியை வைத்து கலக்கும் கமல்!

இது எல்லாம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா

மேலும்
img
பாஜகவை தோற்கடிக்கும் அதிமுக... உற்சாகத்தில் கனிமொழி...!

ஆளும் தேசிய கட்சியை எதிர்க்கும் தினகரனை

மேலும்
img
காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாகும்- பாஜக மூத்த எம்.பி கருத்து

பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர்

மேலும்
img
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போருக்கான தேர்தல் நடைபெறுகிறது! ஐ.பெரியசாமி பேச்சு!!

ரெட்டியார்சத்திர தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img