வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

எரிபொருள் உயர்வு: பாரிஸில் வன்முறைப் போராட்டம்: 1700 பேர் கைது
திங்கள் 10 டிசம்பர் 2018 13:07:05

img

பாரிஸ், 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மஞ்சள் சட்டை போராட்டக்காரர்கள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் 1,700க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பாரிஸ் நகரில் எரிபொருள் விலைவாசி உயர்வைக் கண்டித்து போராட்டம் துவங்கியதையடுத்து நேற்று முதல் அப்போராட்டம் வன்முறை போராட்டமாக மாறியது. கையில் ஆயுதங்கள் ஏந்திய இளைஞர்கள் பலர் பாரிஸ் தெருக்களில் இறங்கி வாகனங்களை சேதப்படுத்தினர்.

அங்கு சாம்ப்ஸ் எலிசீஸ் அவினியூவில் கூடிய போராட்டக்காரர்கள் பேரணியாகப் புறப்பட்டனர். சிறிது தூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி னர். போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை மூண்டது. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஈபிள் கோபு ரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து விரட்டியடித்தனர்.இந்த மோதல் தொடர்பாக 1450 பேரை போலீசார் கைது செய்தனர். 

பாரிஸ் புறநகரில், பாரிசுக்குச் செல்லும் முக்கிய வழித்தடமான போர்ட்டே மெய்லட்டில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர். மஞ்சள் சட்டை இயக்கத்தினர் போக்குவரத்தை முடக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதை கட்டுப்படுத்த 8 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்க ப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. தற்போது கிடைத்த தகவலின்படி மொத்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1450 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் திடீர் வெள்ளம் 

மத்திய மேற்கு மாகாணங்களான நெப்ராஸ்கா, ஐயோவா,

மேலும்
img
தேர்தல் தகராற்றில் 6 பேர் சுட்டுக் கொலை

நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சில மலையோரப்பகுதி

மேலும்
img
மசூதிகளில் மக்களைக் கொன்ற பயங்கரவாதியின் பெயரை உச்சரிக்க மாட்டேன் -நியூசிலாந்து பிரதமர் 

சட்டம் முழு வீச்சில் அவன் மீது பாயும்

மேலும்
img
அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க பேஸ்புக் அதிரடி நடவடிக்கை 

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு

மேலும்
img
டிரம்ப்பின் வீட்டோ அதிகாரத்தை பறிக்க  வாக்கெடுப்பு 

அதிபருக்குள்ள தனி அதிகாரத்தை வைத்து நாட்டின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img