சனி 15, டிசம்பர் 2018  
img
img

எங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளப்படுத்தியதே தமிழ்ப்பள்ளிகள்தான்.
வெள்ளி 07 டிசம்பர் 2018 14:06:38

img

நாட்டில் செயல்பட்டு வரும் 525 தமிழ்ப்பள்ளிகள்  மலேசிய இந்தியர்களின் தாய்மொழியையும் பாரம்பரியத்தையும் சமய நம்பிக்கையைும் தலைமுறை மாறாமல் காத்து நிற்கும் நிலையங்களாகவே கருதப்பட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் கல்வியைத் தொடர்வது வரப்பிரசாதமாகவே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். தோட்ட மேலாளராக பணியாற்றிய போது தமிழுணர்வு மாறாமல் நான்கு பிள்ளைகளும் தமிழ்ப்பள்ளியிலேயே கல்வியைத் தொடங்கு வதற்கான முடிவு துளியளவும் ஏமாற்றத்தைத் தரவில்லை என்பதை நிரூபித்துள்ளனர் மாரியப்பன் அர்ஜுனன் - கண்ணகி கருப்பையா தம்பதியர்.

மாரியப்பன் அர்ஜுனன்-கண்ணகி தம்பதியர் இருவருமே ஆரம்பக் கல்வியை புக்கிட் கிளேடேக் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியிருந்த வேளையில் பிள்ளை களின் கல்வியையும்  நெகிரி செம்பிலான் ஆயர் கூனிங் செலாத்தான் தமிழ்ப்பள்ளியில் தொடங்கியதன் இனிமையான பலன்களின் மகிழ்வோடு குடும்ப த்தினரின் பயணம் தொடர்கின்றது.

மாரியப்பன் அர்ஜுனன் - கண்ணகி கருப்பையா இணையரின் நான்கு புதல்வர்களில் மூத்தவர் பழனிகுமார் மாரியப்பன். தோட்டச் சூழலில் வாழ்ந்திருந்தா லும் தமிழ்ப்பள்ளியில் கிடைக்கப்பெற்ற கல்விச் செல்வத்தை ஈப்போ ஆசிரியர் பயிற்சிக்கழகத்தில் உயர்கல்வியைப் பெற்று இன்று ஓர் ஆசிரியராக உயர்ந்துள்ளார். 

அடுத்தவர் நந்தகுமார் மாரியப்பன், தோட்டப்புறப் பள்ளியில் கலவியைத் தொடங்கி மலாயாப் பல்கலைக்கழகத்தில் (க்–) பட்டயக்கல்வியை மேற்கொண்டு குடும்ப மகிழ்ச்சிக்கு வித்திட்டுள்ளார். இன்று நமது நாட்டில் பிரசித்திப் பெற்ற திரை வெளியீட்டு நிறுவனம் ஒன்றில் புதிதாக வரும் திரைப்படங்களை வெளியிடுவதற்கான முடிவினைச் செய்யும் உயரிய பதவியில் இருந்து வருகின்றார்.

குடும்பத்தில் மூன்றாமவர் லெட்சுமண் குமார் மாரியப்பன். இவரும் நெகிரி செம்பிலான், ஆயர் கூனிங், செலாத்தான் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி இன்று தனியார் நிறுவனம் ஒன்றில் உயரிய பணியில் அமர்ந்துள்ளார். தமிழ்ப்பள்ளியில் கல்வியைத் தொடங்கினால் எதிர்காலம் இல்லை என்பதை பொய்ப்பி த்திருக்கும் மாரியப்பன் அர்ஜுனன் - கண்ணகி கருப்பையா தம்பதியரின் கடைக்குட்டி மலர் மஞ்சு மாரியப்பன், மூத்தவர்கள் கல்வி பயின்ற அதே தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்று உயர்கல்வியையும் பெற்றுள்ளார்.

தமிழ்ப்பள்ளியில தொடங்கும் கல்வியால் ஒழுக்க நெறிகளையும் இலக்கிய ஆற்றலையும் பெறும் அதே வேளையில் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கும் ஆற்றலையும் வளர்ப்பதாகக் கூறுகின்றார் நந்தகுமார் மாரியப்பன்.

நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை நமது சமூகத்தின் பலவீனமாகவே கருதும் நந்தகுமார் மாரியப்பன், பெற்றோர்கள் நம்பிக்கையோடு தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தங்களின் ஆறு வாரிசுகளையும் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி வைத்த இராமசாமி கோவிந்தசாமி - கமலாதேவி பாலசுந்தரம் தம்பதியர்.

ஜோதிடக் கலையில் மிகவும் நிபுணத்துவம்

மேலும்
img
அம்னோ முன்னாள் உறுப்பினர்களுக்கு பிகேஆரில் இடமில்லை

அத்திட்டத்தை தாமதப்படுத்த தாம்

மேலும்
img
பிடி3 தேர்வு முடிவுகள். 10ஏ பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

அதிகமான மாணவர்கள் சிறந்த அடைவுநிலையைப்

மேலும்
img
கடைவீட்டில் தீ. தியாகராஜன் உட்பட அறுவர் பலி.

நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்கும்

மேலும்
img
என் ஐந்து பெண் வாரிசுகளின்  வாழ்க்கையை ஒளிமயமாக்கிய  தமிழ்ப்பள்ளிகள்.

தாயார் பெருமிதம்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img