img
img

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் தலைமையில் அதிமுகவினர் அஞ்சலி
புதன் 05 டிசம்பர் 2018 16:44:43

img

சென்னை,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி,  அவரது நினைவிடம் மலர்க ளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைந்ததும், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இது தவிர ஏராளமான பொதுமக்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வருகை தந்ததால், மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா  நினைவிடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img