காஜாங்,
மொழியழிந்தால் இனம் அழியும் என்பதை வரலாறு சான்று பகரும் நிலையில், நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளே நம் இனத்தின் பாரம்பரியத்தைக் காத்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.தாய்மொழி நம் இனத்திற்கு அணி மட்டுமல்ல, மானம் காக்கும் ஆடையாகவும் கருதப்படுகிறது என்பதைத் தெளி வுறக் கூறுகின்றனர், ந.பச்சைபாலன் மற்றும் ரே.கமலாதேவி இணையர். நாடறிந்த இலக்கியப் படைப்பாளரும் தமிழ் ஆர்வலருமான இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ந.பச்சை
பாலன் எனப்படும் ந.பாலகிருஷ்ணன் தன்னுடைய 3 பிள்ளைகளுக்கும் தலைமுறை மாறாமல் தமிழ்ப்பள்ளியிலேயே படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததன் பயனால், மூவருமே கல்வியில் மிகச் சிறந்த எல்லையைத் தொட்டுள்ளனர்.அவர்களின் மூத்த மகள் கனிமொழியாள் பாலகிருஷ்ணன் தன்னு டைய கல்விப் பயணத்தைக் காஜாங் தமிழ்ப்பள்ளியில் தொடங்கி மணிப்பால் பல்கலைக்கழகத்தில் (Manipal University) மருத்துவத்துறையில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது ந.கனிமொழியாள் செராஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
ந.பச்சைபாலன் - ரே.கமலாதேவி தம்பதியரின் இரண்டாவது மகன் தமிழினியன் பாலகிருஷ்ணன் காஜாங் தமிழ்ப்பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்துவிட்டு இன்று பொறியியலாளராக உயர்ந்துள்ளார். தற்போது அவர் தலைநகரில் உள்ள கே.பிந்தார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தமிழ்மொழி மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் ஆழமான ஆற்றலைக் கொண்டிருக்கும் ஆசிரியர் ந.பாலகிருஷ்ணன்-ரே.கமலாதேவி தம்பதியரின் கடைக்குட்டியான பொன்முல்லை பாலகிருஷ்ணன் காஜாங் தமிழ்ப்பள்ளியில் ஆறாண்டு கால ஆரம்பக் கல்வியை முடித்துத் தற்போது அனைத்துலக மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பல்மருத்துவத் துறையில் நான்காமாண்டில் படித்து வருகிறார்.
நாடு தழுவிய நிலையில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மாணவர்களுக்குப் பாடங்களை மட்டும் போதிக்காமல் மன வளர்ச்சிக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் வித்திடும் களமாகவும் இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. நம் இனத்தின் அரணாக விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் தங்களின் கல்வியைத் தொடங்கும் மாணவர்களே நாளை நம் இனத்தின் மாண்பைக் காக்கும் காவலர்கள் என்பதை நன்குணர்ந்து அவர்களுக்குத் தமிழ்க்கல்வியை ஏற்படுத்திக் கொடுக்கும் சூழலை உருவாக்கித் தர வேண்டும்.
தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்
மேலும்கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்
மேலும்மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா
மேலும்