சனி 15, டிசம்பர் 2018  
img
img

பா.ஜ.க. காலப்போக்கில் மாநில கட்சியாக மாறிவிடும் - தம்பிதுரை
திங்கள் 03 டிசம்பர் 2018 18:34:29

img

பா.ஜ.க. காலப்போக்கில் மாநில கட்சியாக மாறிவிடும் என அதிமுக எம்பியும், பாராளுமன்ற துணை சபாநாயகரமான தம்பிதுரை கூறியுள்ளார்.கரூர் மாவட்டம் கடவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்நாடகத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் வருவதால் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் இடம் இல்லாததால் அரசியல் நோக்கத்துடன் பார்க்கிறார்கள். தமிழகத்தில் தமிழ் உணர்வு, திராவிட உணர்வு மேலோங்கியுள்ளது. தேசிய கட்சிகளுக்கு இங்கு இடம் இல்லாத நிலை இருக்கிறது. எனவேதான் புறக்கணிக்கிறார்கள்.ஒவ்வொரு மாநில மொழியையும், கலாசாரத்தையும் மதித்து மத்திய அரசு நடக்க வேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு உள்ள மாநிலங்களில் உதவி செய்கிறார்கள். அதிகம் நிதி தருகிறார்கள். இது வருந்தத்தக்கது. இந்தியா ஒற்றுமையாகதான் இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது.

தேசிய கட்சிகள் அரசியல் விருப்பு வெறுப்புகளை காண்பிப்பதால் மாநில உணர்வுள்ள கட்சிகள் வளர்ந்து வருகின்றன. தேசிய கட்சியான காங்கிரஸ் இப்போது 2 மாநிலங்களில்தான் ஆளுகிறது. அது மாநில கட்சியாக மாறும் நிலைமை இருக்கிறது. பா.ஜ.க.வும் காலப்போக்கில் மாநில கட்சியாக மாறி விடும். இவ்வாறு கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
நடு வானில் பாலியல் தொந்தரவு; தமிழக இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை

இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

மேலும்
img
தினகரன் கூடாரம் காலியாகும்... ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி வாக்குறுதி!!!

இரண்டு எம்எல்ஏக்கள் வருவது உறுதி

மேலும்
img
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் தேர்வு; காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

அதன்படி இன்று காங்கிரஸ் கட்சி இதற்கான

மேலும்
img
செந்தில்பாலாஜி கட்சி தாவலுக்கு திருக்குறள் சொன்ன எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவால்தான் நாட்டிற்கு அடையாளம்

மேலும்
img
ரிசர்வ் வங்கி ஆளுநர் நியமனம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய சுப்பிரமணியன் சுவாமி

'ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்தி காந்த தாஸை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img