சனி 15, டிசம்பர் 2018  
img
img

இந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.
வியாழன் 29 நவம்பர் 2018 12:55:52

img

வாஷிங்டன்,

இந்திய மக்களுக்கு அமெ ரிக்கா துணை நிற்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித் துள்ளார். நாட்டின் நிதி தலை நகரமான மும்பையில் 10 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் பயங்கரவாதி கள் அரங்கேற்றிய அதிபயங்கர தாக்குதலை நினைத்தால் இன்றும் அனை வரின் இருதயமும் பதறும். 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பைக்கு கடல் மார்க்கமாக ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். 

மும்பை சி.எஸ்.எம்.டி. ரயில்நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா மருத்துவமனை, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கி குண்டுகளால் குருவிகளைபோல சுட்டுத்தள்ளினர். உலகையே உலுக்கிய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், வெளிநாட்டினர், பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்ட போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர். 

308 பேர் படுகாயம் அடைந்தனர்.  அந்த கொடூர தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறை வடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் நேற்று அனு சரிக்கப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மும்பை தாக்குதலை நினைவு கூர்ந்து, டுவிட்டரில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். பயங்கரவாதத்தை ஒருபோதும் வெற்றி பெற விடமாட்டோம். வெற்றிக்கு அருகே கூட வரவிடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். 

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
மிஸ் வேர்ல்டு 2018 போட்டியில் மெக்சிகோ அழகி  வனிசா போன்ஸ் டி லியோன் பட்டம் வென்றார்

கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற

மேலும்
img
எரிபொருள் உயர்வு: பாரிஸில் வன்முறைப் போராட்டம்: 1700 பேர் கைது

கையில் ஆயுதங்கள் ஏந்திய இளைஞர்கள் பலர் பாரிஸ் தெருக்களில் இறங்கி

மேலும்
img
காதலித்த கனடா பெண்ணை திருமணம் செய்து கொண்ட  ஜாக்கி சான் மகள் எட்டா என்ஜி

சுயபாலின காதலால் 31 வயது கனடா

மேலும்
img
இந்திய மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்.

கண்ணில்பட்டவர்களை எல்லாம் துப்பாக்கி குண்டுகளால்

மேலும்
img
செவ்வாய்க்கிரகத்தில் தரை இறங்கிய இன்சைட் விண்கலம்

கலிபோர்னியாவில் இருந்து விண்ணில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img